Last Updated : 19 Apr, 2015 02:10 PM

 

Published : 19 Apr 2015 02:10 PM
Last Updated : 19 Apr 2015 02:10 PM

வணிக நூலகம்: தெளிவை தரும் அந்த நொடி

வளமையான பிரச்சினைகளைத் தீர்க்கும் முறைகள் வணிகக் கல்வி நிறுவனங்களில் பயிற்றுவிக்கப்படுகின்றன. இவை தினசரி போட்டிகளை எதிர்கொள்ள உதவும். ஆனால், அதிக அளவிலான நிலையற்ற தன்மையை கொண்ட பிரச்சினைகளுக்கு இவை மட்டுமே தீர்வாக அமையாது. மானிடவியல். சமூகவியல், தத்துவம் மற்றும் உளவியல் ஆகியவைகளை ஒரு சேர குழைத்து நடைமுறை சாத்தியங்களை சந்திக்கும் வகையில் உத்திகளை (Christian Madsbjerg and Mikkel Rasmussen) நூலாசிரியர்கள் மேற்கூறிய புத்தகத்தில் கூறுகிறார்கள்.

பிரச்சினைகளை தீர்க்கும் உத்திக்கு உணர்வுசார் முடிவுகள் அல்லது உணர்வு களின் செயல்முறை என்று பெயரிட்டு உள்ளார்கள். இந்த வித்தியாசமான, பிரச்சினைகளைத் தீர்க்கும் அணுகுமுறை LEGO, SAMSUNG, ADIDAS, COLA PLAST மற்றும் INTEL போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் எவ்வாறு இருந்தன, பிரச்சினைகளைத் தீர்த்தன மற்றும் புதிய சந்தைகளை வசப்படுத்தின என்பது பற்றி 214 பக்கங்களில் கூறுகிறார்கள்.

புதிய சந்தை, புதிய உத்தி, புதிய பொருட்கள்

மனித அறிவியலை பயன்படுத்துவ தற்கு அதன் உணர்வுபூர்வ முறை பெரிதும் உதவும். சமூக அறிவியல் முறைகளில் எண்களின் தாக்கமும், புள்ளி விவரங்களின் வெளிப்பாடும் அதிக அளவில் இருக்கும். மற்ற அறிவியல் கோட்பாடுகளில் எண்கள், அளவீடுகள் போன்றவைகள் ஆதிக்கம் செலுத்தும் ஆனால், மனித அறிவியலில் உணர்வும், அனுபவித்து அறியும் தன்மைகளும் புதிய வழிகாட்டுதலுக்கு உதவுகின்றன. உதாரணமாக, சாம்சங் தொலைக்காட்சி பெட்டிகள் 2000ம் ஆண்டுக்கு பிறகு அதிக அளவில் சந்தை மதிப்பை பெற்றது. அதுவரை தொலைக்காட்சி பெட்டிகள் தொழில்நுட்ப உச்சத்தின் வெளிப்பாடுகளை தாங்கி நின்றன. ஆனால், உணர்வுகளின் ‘அந்த ஒரு நொடியில்’ உருவான கருத்துச் செறிவு, தொலைக்காட்சி பெட்டிகள் தொழில் நுட்பத்தையும் தாண்டி ஒரு அழகுமிகு மரச்சாமானாக வீட்டில் இருக்க கூடிய மேசை, கட்டில், நாற்காலிகளுக்கு இணையான அழகு உணர்வுடன் கூடிய பொருளாகப் பார்க்கப்பட்டது.

உணர்வுசார் முடிவுகள் காரணமாக 2007ம் ஆண்டில் இருந்து 2012ம் ஆண்டுக் குள் சந்தை பங்களிப்பு 11% லிருந்து 29% ஆக மாறியது. தொலைக்காட்சிப் பெட்டி என்ற உருவத்தைக் காட்டிலும் தொலைக்காட்சிப் பெட்டியில் பார்க்கும் நிகழ்வுகளை உணர்வுபூர்வமாக பெற்றதி னால் விற்பனை வெகு வேகமாக உயர்ந்தது. தரவுகளையும், எண்களை யும் வைத்து போராடிக் கொண்டிருக் காமல் உணர்வுசார் முடிவுகளால் பெற்ற வெற்றிக்கு இது ஒரு சான்று.

தலைவர்களும் முடிவு எடுக்கும் பாங்கும்

தலைவர்கள் பெரும்பாலும் முடிவு எடுப்பதில் சிறந்தவர்களாக இருப்பார் கள். உத்திகளின் அடிப்படையிலும், பணியாளர்களின் பரிந்துரைகளினாலும், சந்தையில் உள்ள எண்ணிக்கை தொடர் பான செய்திகளால் முடிவுகளை வேக மாக எடுப்பார்கள். இவர்கள் அறிவுசார் முடிவுகளை எடுப்பதில் சிறந்தவர்களாக இருப்பார்கள். ஆனால், உணர்வுசார் முடிவுகளை எடுப்பவர்கள் மிகவும் வித்தியாசமாக சிந்தித்து உணர்வுகளை உள்வாங்கி, சாதாரண நிகழ்வுகளை பெரி தாக்கி எண்கள், சத்தம், அறிவுரைகளை தாண்டி முடிவு எடுப்பார்கள். ஆக தலைமை பண்புகள் இருந்தாலும் இந்த இரு வகையான முடிவு எடுப்பதில் உணர்வுசார் முடிவு எடுக்கும் தலைவர்கள் தலை சிறந்தவர்களாக இருக்கிறார்கள்.

* அறிவுசார் முடிவு எடுக்கும் தலைவர்கள்

* சரியான நேரத்தில் முறையான முடிவுகள்

* ஆதாரங்களே அடிப்படை

* பகுப்பாய்தல்

* உணர்வுகளில் இருந்து பிரிந்திருத்தல்

* தரவுகளால் சரியான முடிவுகள்

* உணர்வுசார் முடிவெடுக்கும் தலைவர்கள்

* எதிர்கால இலக்குகளை கண்டறிதல்

* தீர்ப்புகளின் அடிப்படையில் அமைதல்

* தொகுத்து உணரும் திறன்

* நிகழ்வுகளால் ஈர்க்கப்படுதல்

* தரவுகளால் குழப்பங்களை அதிகரித்தல்

மேலே கூறிய அறிவுசார், உணர்வுசார் முடிவுகளின் வித்தியாசங்களை இன்னும் தெளிவாக கூறவேண்டுமானால், உலக தலைவர் சிலரை மேற்கோள் காட்டலாம். ஒருங்கிணைந்த ஜெர்மனியை உருவாக்கிய பிஸ் மார்க், அமெரிக்க புரட்சிக்கு தலைமையேற்று ஐக்கிய அமெரிக்க நாடுகளை உருவாக்கிய ஜார்ஜ் வாஷிங்டன், 1930களில் ஏற்பட்ட பெரும் பொருளாதார மந்த நிலையை எதிர்கொண்டு வெற்றி அடைந்த தியோடர் ரூஸ்வெல்ட் மற்றும் இரும்பு திரைக்கு பின் இருந்த நாட்டை, சூழ்ச்சிப் போர்கள் நிறைந்திருந்த காலத்தில் மக்களாட்சி முறைக்கு எடுத்து சென்ற மிகையீல் கோர்பச்சேவ் ஆகிய அனைவரும் உணர்வுசார் முடிவுகளுக்கு சொந்தக்காரர்கள்.

இவர்கள் அனைவருமே தெளிவை தேடும் பொழுது ‘அந்த ஒரு நொடியில்’ கிடைத்த பொறியை பயன்படுத்தி உணர்வுசார் முடிவு எடுத்தார்கள். உணர்வுசார் முடிவெடுக்கும் தலைவர் கள் சில தனிப்பட்ட குணநலன்களை கொண்டிருந்தனர்.

பொருட்கள், சேவைகள், கருத்துக் களில் கால, தேச, வர்த்தமானங்களை கடந்தவர்களாக இருப்பார்கள். வெவ் வேறு இணைப்புகளை ஒருங்கிணைத்து சரியான நேரத்தில் நிறுவனத்தையும் தற்போதைய கால மாறுபாடுகளையும் தாண்டியவர்களாக இருப்பார்கள்.

வெவ்வேறு இணைப்புகளை எண்களின் துணையின்றி உணர்வுகளின் துணை சேர்த்து நெறிப்படுத்துவார்கள். உடன் இருப்பவர்களின் வேறுபட்ட திறன்களை ஒருங்கிணைத்து திட்டங்களை செயலாக மாற்றி செயல்முறைகளை சரியான வழியில் செலுத்துவார்கள்.

உணர்வுசார் தலைமைக்கு IKEA நிறுவனர் Ingvar Kampared ஒரு சிறந்த எடுத்துக்காட்டு அவர் நிர்மானித்த வீட்டு உபயோகப் பொருட்கள் அங்காடி உலகளவில் தனித்துவம் வாய்ந்தது. ஒவ்வொரு வகையானப் பொருட்களுக்கும் தனித் தனியான பெயர்கள் வழக்கப்பட்டன. உதாரணமாக உணவு, மேசை, நாற்காலிகளுக்கு பின்லாந்து தேசத்தில் உள்ள இடங்களின் பெயர்கள் வைக்கப்பட்டன. டென்மார்க் தேசத்தில் உள்ள இடங்களின் பெயர்கள் தரைவிரிப்புகளுக்கு சூட்டப்பட்டன. விலைக் கட்டுப்பாட்டிலும், பொருள் தர மேம்பாட்டிலும் எப்பொழுதும் குறியாய் இருந்தார். 450 கோடி அமெரிக்க டாலர்களுக்கு சொந்தகாரர் ஆன அவர் மிகவும் பழைமையான VOLVO 240 காரையும், உபயோகித்த தேனீர் பைகளை மறுஉபயோகத்திற்காகவும், உணவகங்களில் இருந்து எடுத்து வந்த உப்பு மற்றும் மிளகு பைகளை தன் உபயோகத்திற்காகவும் பயன்படுத்தி வந்தார். அதே நேரம் IKEA கடைகளில் ஏதேனும் ஒன்றில் மிகவும் எளிமையான மதிய உணவை சாப்பிட்டுக் கொண்டிருப்பார். ஆக உணர்வுசார் முடிவெடுக்கும் தலைவர்கள் அறிவுசார் முடிவெடுக்கும் தலைவர்களை விட மனதையும் உணர்வையும் நம்புவார்கள். தரவுகளையும், தகவல்களையும், எண்களையும் அல்ல.

உணர்வுசார் முடிவு மேற்கொள்ளும் தலைவர்கள் தங்கள் தலைமை பண்புகளில் மிகவும் வித்தியாசமாக இருப்பார்கள். உதாரணமாக APPLE குழுமத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் மனதின் ஆழத்தில் இருந்த ஒரு நிகழ்வை எண்களும், தரவுகளும் இல்லாமல் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்தார். ஜெனரல் எலெக்ட்ரிக் குழுமம் உலகின் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு ஒரு வித்தியாசமான அணுகுமுறையை “ECOMAGINATION” என்று பெயரிட்டது. Nova Nar Disk என்ற மருத்துவக் குழுமம் உலகில் சர்க்கரை வியாதியை குறைப்பதற்கு, உதவி, கல்வி, தனிநபர் மேலாண்மை போன்றவைகளை ஊக்குவித்தது. ஸ்டார் பக்ஸ் என்ற பன்னாட்டு காபி குழுமம் உங்கள் வாழ்வில் மூன்றாம் இடம் என்ற அர்த்தத்தில் வீட்டையும், வேலை செய்யும் இடத்தையும் அடுத்து மூன்றாவதாக ஸ்டார் பக்ஸ் அங்காடியையும் குறிப்பிட்டது.

இந்த புத்தகத்தை படிக்கும் பொழுது நீங்கள் நிச்சயம் வித்தியாசமான உணர்வை பெறுவீர்கள். ஏனென்றால் மேலாண்மை பணிகளிலும், நிறுவனங் களிலும், அடுத்த கதவில் இருக்கும் கடைகளிலும் எண்களும், தரவுகளும், தகவல்களும் முடிவுகளுக்கு மூலகாரண மாக இருக்கின்றன. அவ்வாறு எடுக்கப் படும் முடிவுகள் பெரும்பாலான நேரங்களில் குறுகிய கண்ணோட்டத் துடனும், உடனடி வெற்றிக்காகவும் அன்றே நீர்த்துப் போக கூடிய விளைவு உடையதாகவும் இருக்கும். இதைதான் அறிவுசார் முடிவுகள் என்று முத்திரைப் பதித்திருக்கிறார்கள். ஆனால் இந்த புத்தகத்தின் மூலம் இதுவரை நாம் கண்டது உணர்வுசார் முடிவுகள். இந்த இடத்தில் பெரும்பாலானவர்களின் முதல் கேள்வி எங்கோ நடந்ததற்கும் நமக்கும் என்ன தொடர்பு. உலக தலைவர்களின் தகவல்கள் நம்மை எவ்வாறு வழிநடத்தும் என்பதாக இருக்கும். இரண்டு அறிஞர்கள் ஆய்வு செய்து உலகளாவிய நிலையில் சில கருதுகோள்களை நிறுவி சில முடிவுகளை கொடுத்திருக்கிறார்கள். அவைகளை படிப்பதன் மூலம் அறிவுசார் முடிவுகளில் இருந்து உணர்வுசார் முடிவுகளுக்கு சிலர் மாறும் வாய்ப்புகள் இருக்கலாம். அப்படி யாரேனும் சிலர் மாறினால் இந்த புத்தகத்திற்கும், மதிப்பீட்டிற்கும் ஒரு பெரிய வெற்றி.

rvenkatapathy@rediffmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x