Published : 30 May 2014 12:13 PM
Last Updated : 30 May 2014 12:13 PM

நிருபேந்திர மிஸ்ரா - இவரைத் தெரியுமா?

$ 69 வயதாகும் மிஸ்ரா பிரதமரின் முதன்மை செயலாளர். கடந்த புதன் கிழமை இந்த பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார்.

$ இதற்கு முன்பு தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) தலைவராக இருந்து 2009-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். டிராய் விதிப்படி அங்கிருந்து ஓய்வு பெற்றவர்கள் மத்திய மற்றும் மாநில அரசின் உயர் பொறுப்புகளை வகிக்கக் கூடாது என்ற விதி இவருக்காக மாற்றி அமைக்கப்பட்டது.

$ உத்திரப்பிரதேச பிரிவை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி இவர். 1967-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். உத்திரப்பிரதேச முதல்வர்கள் கல்யாண் சிங் மற்றும் முலாயம் சிங் யாதவ் ஆகியோருக்கு முதன்மை செயலாளராக இருந்தவர்.

$ மேலும் மத்திய அரசிலும் பல முக்கிய பொறுப்புகளை வகித்திருக்கிறார். டெலிகாம், வர்த்தம் மற்றும் உரத்துறை அமைச்சகத்தில் இருந்திருக்கிறார். வாஷிங்டனில் இருக்கும் இந்திய தூதரகத்திலும் சில காலம் பணிபுரிந்தவர்.

$ உலக வங்கியின் சர்வதேச நிதி மையத்திலும் சில காலம் பணிபுரிந்தவர்.

$ அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் பொதுநிர்வாகமும், வேதியியலும் படித்தவர். ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகப்படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x