Published : 03 May 2014 02:58 PM
Last Updated : 03 May 2014 02:58 PM

கௌதம் அதானி- இவரைத் தெரியுமா?

#மின்சாரம், துறைமுகம் என பல தொழில்களில் ஈடுபட்டிருக்கும் அதானி குழுமத்தின் தலைவர். இவர் குஜராத்தைச் சேர்ந்தவர்.

#குஜராத் பல்கலைக்கழகத்தில் பி.காம் சேர்ந்தார். ஆனால் படிப்பை தொடராமல் விலகிவிட்டார்.

#அப்பாவின் தொழிலைச் செய்யாமல் மும்பைக்கு சென்று, வைரங்களைத் தரம் பிரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்த இவர், பிறகு அந்தத் தொழிலிலேயே ஈடுபட்டார்.

#திருபாய் அம்பானியின் தொலைநோக்கு திட்டம் பிடிக்கும் என்றாலும் அவர் எனக்கு முன் உதாரணம் கிடையாது, ஒவ்வொரு மனிதர்களிடத்திலிருந்தும் ஒவ்வொன்றை எடுத்துக்கொள்வேன் என்பவர்.

#1999-ம் ஆண்டு இவர் கடத்தப்பட்டதாகவும் பிறகு பணம் கொடுத்து மீட்கப்பட்டதாகவும் கூட ஒரு செய்தி உண்டு, மேலும் மோசடி குற்றச்சாட்டு, அந்நிய செலாவணி மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் உண்டு.

#மோடிக்கு தேர்தல் நிதி உதவி அளித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் மோடிக்கு மட்டுமல்ல எந்த அரசியல் கட்சிக்கும் நிதி உதவி செய்யவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x