Published : 18 Mar 2015 10:24 AM
Last Updated : 18 Mar 2015 10:24 AM

60 லட்சம் கார் உற்பத்தி: ஹூண்டாய் சாதனை

கொரியாவை சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் இந்த ஆண்டு 60 லட்சம் கார்களை உற்பத்தி செய்துள்ளது. ஹூண்டாய் நிறுவன இந்திய பிரிவின் மைல்கல் என்று நிறுவனம் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த நிறுவனம் ஐ20 ஆக்டிவ் ஸ்போர்ட்ஸ் ரக கார், மற்றும் ஐ20 ஹெட்ச்பேக் காரை நேற்று அறிமுகப்படுத்தியது.

40 லட்சம் கார்களை இந்திய நுகர்வோர் சந்தையில் விற்கும் என எதிர்பார்ப்பதாக இந்த நிறுவனம் கூறியுள்ளது.

நடப்பாண்டில் 13 சதவீத வளர்ச்சியை எதிர்பார்ப் பதாகவும் கூறியுள்ளது. கடந்த ஆண்டில் இந்த நிறுவனம் 5 சதவீத வளர்ச்சியை எட்டியது.

2013-ம் ஆண்டில் நிறுவனம் 50 லட்சம் கார்களை உற்பத்தி செய்தது.

இப்போது 60 லட்சம் கார்களை உற்பத்தி செய்து சாதனை கண்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x