Published : 12 Mar 2015 10:59 AM
Last Updated : 12 Mar 2015 10:59 AM

கச்சா எண்ணெய் விலை மேலும் சரிவு

கடந்த ஒரு மாதங்களில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் (பிரண்ட்) விலை நேற்று மேலும் சரிந்தது.

நேற்றைய நிலவரப்படி பேரல் 56 டாலருக்கு வர்த்தகம் ஆனது. தேவைக்கு அதிகமாக விநியோகம் காரணமாகவும் இந்த விலை சரிந்துள்ளது.

யூரோவுக்கு நிகரான டாலரின் மதிப்பு கடந்த பனிரெண்டு வருடங் களுக்கு பிறகு தற்போது ஏற்றம் கண்டுள்ளது. ரஷ்யா தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதியை இந்த ஆண்டு அதிகரிக்க உள்ளது என்றும், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி இருந்த போதிலும் பேரல் 100 டாலருக்கும் குறைவாக விலை சரியாது என்கிற எதிர்பார்ப்பு இருந் தது என்றும் ரஷ்யாவின் எரிசக்தி துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பிரண்ட் கச்சா எண்ணெய் 3 சதவீத சரிவுக்கு பிறகு பேசிய எண்ணெய் துறை நிபுணர்கள் கச்சா எண்ணெயின் விலை மேலும் சரியும் என்று எதிர்பார்த்ததாகக் குறிப்பிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x