Published : 14 Mar 2015 11:42 AM
Last Updated : 14 Mar 2015 11:42 AM

பாலோன்ஜி சபூர்ஜி மிஸ்த்ரி - இவரைத் தெரியுமா?

$ பூர்ஜி பாலோன்ஜி குழுமத்தின் தலைவர். இந்தியக் குடிமகனாக இருந்து அயர்லாந்து குடிமகனாக மாறினார்.

$ 1929ல் பிறந்தவர், தனது 18-வது வயதிலிருந்து பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். யூனியன் பேங்க் ஆப் இந்தியா, பாம்பே டையிங் மற்றும் பல்வேறு சிமென்ட் உற்பத்தி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

$ சபூர்ஜி பாலோன்ஜி கட்டுமான நிறுவனம், போர்ப்ஸ் டெக்ஸ்டைல் மற்றும் யுரேகா போர்ப்ஸ் நிறுவனங்கள் இவரது குழுமத்தைச் சேர்ந்தவை.

$ டாடா குழுமத்தின் 18 சதவீத பங்குகளை வைத்திருக்கும் ஒரே தனியார் பங்குதாரர். தற்போதைய தலைவர் சைரஸ் மிஸ்திரியின் தந்தை.

$ இந்தியாவின் முக்கிய கட்டுமான வல்லுநர், மத்திய கிழக்கு நாடுகளில் கட்டுமான ஒப்பந்தங்களை மேற்கொண்ட முதல் இந்தியர்.

$ மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி கட்டிடம், பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் கட்டிடம், பாரத ஸ்டேட் வங்கி கட்டிடம் போன்ற முக்கிய கட்டிடங்களை கட்டியவர்.

$ இந்திய சிமென்ட் நிறுவனங்களின் கூட்டமைப்புக்கு இரண்டு முறை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x