Published : 02 Mar 2015 12:23 PM
Last Updated : 02 Mar 2015 12:23 PM

பட்ஜெட்டின் கண்ணாடி - மத்திய நிதி அமைச்சர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் சிறப்பம்சங்கள்

1.செலவில் மாற்றம்

14-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு விட்டதாகவும் மத்திய நிகர வரி வருவாயில் மாநிலங்களின் பங்கை 32%-லிருந்து 42% பங்காக உயர்த்தியிருப்பதை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார். மாநிலங்களுக்கு அதிக நிதி செல்வதால் மத்திய அரசு அத்துறைகளுக்கான ஒதுக்கீட்டைக் குறைத்துக் கொள்கிறது, சில மத்திய திட்டங்களை முடித்துக்கொள்கிறது.

வரிகள், தீர்வைகளில் மாநிலங்களுக்கு அதிகம் பகிர்ந்தளிக்கப்படுகிறது. எனவே மாநிலங்களுக்கும் மத்திய ஆட்சிக்குள்பட்ட பிரதேசங்களுக்குமான ஒதுக்கீடு குறைகிறது. அரசின் மொத்தச் செலவில் மாநிலங்களுக்கான பங்குகள் விகிதம் அதிகரித்துள்ளது.

2.சமூகநல திட்டங்கள்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்துக்கு கடந்த ஆண்டு ரூ.7,000 கோடி ஒதுக்கப்பட்டது. திருத்தப்பட்ட மதிப்பீட்டில் அது ரூ.3,400 கோடியாகக் குறைக்கப்பட்டது. இந்த பட்ஜெட்டில் ரூ.95 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. “மத்திய அரசின் நிதி வெட்டப்படவில்லை. வரிகள், தீர்வையிலிருந்து அதிகப் பணம் தரப்படுவதால் எந்தெந்த துறைக்கு எவ்வளவு என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கே வழங்கப்பட்டுவிட்டது” என்று குடிநீர், துப்புரவுத்துறை அமைச்சக அதிகாரியொருவர் இதை விளக்கினார்.

3.பெரிய திட்டங்களின் நிலை

சில திட்டங்கள் முழுக்க கைவிடப்பட்டுள்ளன. பின்தங்கிய பகுதிகள் மானிய நிதி, பஞ்சாயத்துகளை வலுப்படுத்தும் திட்டம், காவல்துறை நவீனமய திட்டம், மின் ஆளுமை (e governance) திட்டம் ஆகியவற்றை மாநில அரசுகள் விரும்பினால் தொடரலாம். இவையன்றி வேறு 24 திட்டங்களை நிறைவேற்றுவதற்கான சுமையை மாநிலங்கள் ஏற்க வேண்டும்.

தூய்மை இந்தியா திட்டம், தேசிய சுகாதார திட்டம், நடுநிலைக் கல்விதிட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ப்பு திட்டம், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டம், கிராமப்புற வீடமைப்பு திட்டம் இவை அதில் அடங்கும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம், மதிய உணவு திட்டம், அனைவருக்கும் கல்வி திட்டம், கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் உள்பட 31 திட்டங்கள் முழுக்க முழுக்க மத்திய அரசால் நிறைவேற்றப்படும்.

4.ராணுவ செலவு

பாதுகாப்பு (ராணுவம்) துறைக்கான செலவு அதிகரிப்பு, மானியங்களுக்கான செலவு சிறிது குறைப்பு.

5.கடன் அளவு

அரசின் வருவாயில் கால் பங்கு, கடன் மூலம் கிடைக்கிறது. மொத்த வருவாய் மதிப்பில் கடனுக்கான விகிதம் சர்வதேச அளவில் இந்தியாவில்தான் அதிகம். அது இன்னும் மாறவில்லை.

6.மகளிர் திட்டம்

மகளிருக்கான திட்டங்களில் மத்திய அரசின் ஒதுக்கீடு குறைவு. மாநிலங்களுக்கு அதிக நிதி வழங்கப்படுவதால் இச் செலவை மாநிலங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். மத்திய அரசு குறைத்துவிட்டதாகக் கருதக்கூடாது.

7.வரி வருவாய்

சுங்கவரி, உற்பத்தி வரி ஆகியவற்றில் அளித்த வரிச்சலுகைகள், வரி வருவாய் இழப்பாகக் கருதப்படுகிறது. இது அதிகரித்து வருகிறது, 2014-15-ல் இது ரூ.5.89 லட்சம் கோடி. தங்கம், வைரத்துக்கு அதிகமாக விலக்கு தரப்படுகிறது. 2014-15-ல் வெளிச்சந்தையில் மத்திய அரசு வாங்கிய கடனைவிட, வரிச் சலுகையால் ஏற்பட்ட இழப்பு அதிகம். இந்தத் தொகை வசூலாகியிருந்தால் கடனே வாங்கியிருக்க வேண்டாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x