Published : 07 Feb 2015 11:04 AM
Last Updated : 07 Feb 2015 11:04 AM
சர்வதேச அளவில் முதல் 100 பணக்காரர்கள் பட்டியலில் 4 இந்தியர்கள் இடம்பிடித்திருக்கிறார் கள். உலகம் முழுவதும் 2,089 பெரும் கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள்.
இதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 41வது இடத்தில் இருக்கிறார். முதல் 100 இடங்களில் சன் பார்மா நிறுவனதின் திலிப் சாங்வி 53-வது இடத்திலும், பலோன்ஜி மிஸ்திரி குடும்பம் 60-வது இடத்திலும் மற்றும் விப்ரோ குழுமத்தின் தலைவர் அஸிம் பிரேம்ஜி 74வது இடத்திலும் இருக்கிறார்கள்.
அதிக எண்ணிக்கையிலான பெருங்கோடீஸ்வர்கள் இருக்கும் நாடுகளின் பட்டியலில் ரஷ்யா மற்றும் இங்கிலாந்தை இந்தியா பின்னுக்குத் தள்ளி இருக்கிறது. இந்தியாவில் 97 பெருங்கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது 27 நபர்கள் அதிகம். அமெரிக்காவில் 537, சீனாவில் 430, ரஷ்யாவில் 93 மற்றும் இங்கிலாந்தில் 80 பெருங்கோடீஸ்வர்களும் இருக்கிறார்கள்.
ஹருண் குளோபல் மேற்கொண்ட ஆய்வின்படி 8,500 கோடி டாலர் சொத்துமதிப்புடன் பில்கேட்ஸ் முதல் இடத்தில் இருக்கிறார். மெக்ஸிகோவின் கார்லஸ் ஸ்லிம் இரண்டாவது இடத்திலும் இருக்கிறார்.
68 நாடுகளில் இருந்து இந்த 2,089 கோடீஸ்வர்கள் பட்டியலிடப் பட்டிருக்கிறார்கள்.
இந்த பட்டியலில் மிகவும் வயது குறைந்தவர் பேஸ்புக் நிறுவனத்தின் மார்க் ஜூகர்பெர்க் ஆவார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT