Published : 25 Feb 2015 08:56 AM
Last Updated : 25 Feb 2015 08:56 AM

‘ஓய்வூதியதாரர்களை துன்புறுத்தாதீர்கள்’: வங்கிகளுக்கு அரசு உத்தரவு

உயிருடன் இருப்பதற்கான சான்றிதழ் கேட்டு ஓய்வூதியதாரர்களை துன்புறுத்தவேண்டாம் என்று வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

வங்கிகள் தங்களை அதிகம் துன்புறுத்துவதாக ஓய்வூதியதாரர்கள் தரப்பில் அதிகமான புகார்கள் வந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளதாகத் தெரி கிறது.

ஓய்வூதியர்கள் சங்கம் இந்தப் பிரச்சினையைக் கிளப்பியதோடு இதுபோன்று சான்றிதழ் கேட் பதற்கு வங்கிகளுக்கு அதிகாரம் கிடையாது, அதற்கான விதிகளும் இல்லை என்று சுட்டிக் காட்டியது. மேலும் சில வங்கிகளின் கிளைகளில் சம்பந்தப்பட்ட ஓய்வூதியதாரரே நேரில் வந்து அத்தகைய சான்றிதழையும், ஓய்வூதியம் பெறுவதற்காக அளிக்கப்பட்ட உத்தரவையும் உடன் எடுத்து வர வேண்டும் என வற்புறுத்துவதாக புகார் வந்துள்ளதாக பணியாளர் நிர்வாக அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே உள்ள விதி முறைகளை மட்டும் வங்கி கள் பின்பற்றினால் போது மானது என்று அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோரை துன்புறுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஓய்வூதியதாரர்கள் அளிக்கும் சான்றிதழில் உரிய அதிகாரி கையொப்பமிட்டிருந்தாலே போதுமானது.

ஆதார் அடையாள அட்டை அடிப்படையில் சான்றிதழ் அளிக்க வேண்டும் என வலியுறுத்தக் கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது

பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை செயல்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஓய்வூதியம் பெறுவோர் குறித்த தகவல்கள் ஆதார் அடையாள அட்டை அடிப்படையில் உருவாக்கப்படுகிறது.

இது பகுதியளவிலேயே மேற் கொள்ளப்பட்டுள்ளது. எனவே ஆதார் அடிப்படையிலான சான்றி தழைக் கேட்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

அனைத்து ஓய்வூதியம் பெறுவோரும் ஆண்டுதோறும் ஒரு முறை தாங்கள் உயிருட னிருப்பதை சம்பந்தப்பட்ட வங்கிக்கு தெரிவித்தால் போது மானது என்றும் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினர், மாவட்ட ஆட்சியர், சான்று அளிக்கும் அதிகாரம் பெற்ற அரசு அதிகாரிகள், சப்-இன்ஸ்பெக்டர் நிலை மற்றும் அதற்கு மேற்பட்ட காவல்துறையினர், வட்டார மேம்பாட்டு அலுவலர், தாசில்தார் அல்லது கருவூல அதிகாரிகள் ஆகியோர் சான்றளித்தாலே போதுமானது.

பொதுத்துறை வங்கிகளில் ஓய்வூதியம் பெறுவோராயின் அவர் அந்த வங்கி அதிகாரியிடம் சான்று பெற்ற சான்றிதழை அளிக்கலாம்.

இந்தியாவில் வசிக்காமல் ஓய்வூதியம் பெறுவோராயின் அவர் மாவட்ட ஆட்சியர், வங்கி யாளர் ஆகியோரிடம் சான்று பெற்று அளித்தால் போதுமானது. அதேபோல தூதரக அதிகாரி உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டியதில்லை என்றும் விதி முறைகளில் கூறப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x