Published : 04 Feb 2015 01:14 PM
Last Updated : 04 Feb 2015 01:14 PM

காதலர் தினத்தையொட்டி ஸ்பைஸ் ஜெட் சிறப்புச் சலுகை

பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தையொட்டி ஸ்பைஸ் ஜெட் விமானம் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.

ரூ1.599 முதல் பயணக் கட்டணம் தொடங்குகிறது. இன்று (பிப்ரவரி 4) முதல் பிப்ரவரி 6-ம் தேதி வரை புக்கிங் செய்து கொள்ளலாம். பிப்ரவரி 14, 15 தேதிகளில் சலுகை டிக்கெட்டில் பயணம் செய்யலாம்.

இச்சலுகையானது, ஸ்பைஸ் ஜெட்டின் உள்நாட்டுச் சேவை விமானங்கள், நேரடி விமானங்கள் மற்றும் முன்னோக்கிய விமானங்கள் என அனைத்துக்கும் பொருந்தும் என அந்நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x