Published : 07 Feb 2015 10:44 AM
Last Updated : 07 Feb 2015 10:44 AM

ரெப்கோ ஹோம்பைனான்ஸ்: நிகர லாபம் ரூ.34 கோடி

ரெப்கோ ஹோம்பைனான்ஸ் நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 34 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் நிகர லாபம் 27 கோடி ரூபாயாக இருந்தது.

செயல்பாடுகளின் மூலம் கிடைக் கும் வருமானம் உயர்ந்ததால் நிகர லாபம் உயர்ந்தது. கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 384 கோடி ரூபாயாக இருந்த வருமானம் இப்போது 175 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.

நிறுவனத்தின் மொத்த வாராக்கடன் 1.99 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 1.16 சதவீதமாகவும் இருக்கிறது. கடந்த டிசம்பர் காலாண்டு முடிவில் இந்த நிறுவனம் 97 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x