Published : 03 Jan 2015 11:46 AM
Last Updated : 03 Jan 2015 11:46 AM

அமித் ரஞ்சன் - இவரைத் தெரியுமா?

$ ஸ்லைட்ஷேர் நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் ஒருவர். 2006-ம் ஆண்டு இந்த நிறுவனத்தை ஆரம்பித்தார்.

$ 2012-ம் ஆண்டு இந்த நிறுவனத்தை லிங்டின் நிறுவனம் கையகப்படுத்தியது. அதன் பிறகு நிறுவனத்தின் செயல்பாட்டு பிரிவு இயக்குநராக இருக்கிறார்.

$ ஜெய்ப்பூர் என்.ஐ.டி.யில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கும், டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்பிஏவும் படித்தவர்.

$ ஸ்லைட்ஷேர் நிறுவனம் ஆரம்பிப்பதற்கு முன்பு, கோத்ரெஜ், ஏசியன் பெயின்ட்ஸ், பெப்சிகோ ஆகிய நிறுவனங்களில் பணிபுரிந்திருக்கிறார்.

$ எம்.பி.ஏ. படித்து மார்க்கெட்டிங் பிரிவில் வேலை செய்தவன். எனக்கு டெக்னாலஜி தெரியாது. ஒவ்வொரு சந்திப்பிலும் பிரசன்டேஷன் என்பது முக்கியம். இதனை அப்லோட் செய்ய எதாவது ஒரு இணையதளம் இருக்கிறதா என்று பார்த்தோம். இல்லை என்பதால் ஸ்லைட்ஷேர் ஆரம்பித்தோம், என்னுடைய தொழில் முனைவு ஒரு விபத்து என்று தெரிவித்தார்.

$ ஒரு நிறுவனம் ஆரம்பித்த பிறகு சேரும் சில நபர்கள்தான் அந்த நிறுவனத்துக்கு அடையாளத்தைக் கொடுக்கிறார்கள். நிறுவனத்தின் தலை எழுத்தை தீர்மானிக்கும் முதல் சில நபர்களை அடையாளம் காண்பது முக்கியம் என்று தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x