Published : 21 Jan 2015 12:11 PM
Last Updated : 21 Jan 2015 12:11 PM

குஜராத்தில் சூரிய மின் உற்பத்தி: வெல்ஸ்பன் ஒப்பந்தம்

சூரிய மின் உற்பத்தி துறையில் முன்னணியில் உள்ள வெல்ஸ்பன் நிறுவனம் குஜராத்தில் மின் உற்பத்தி தொடங்க ஒப்பந்தம் செய்துள்ளது. குஜராத்தில் சமீபத்தில் நடைபெற்ற வைப் ரண்ட் குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் குஜராத் உர்ஜா விகாஸ் நிகாம் நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டது.

500 மெகாவாட் காற்றாலை மற்றும் 600 மெகாவாட் சூரிய மின் சக்தி மூலம் உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக ரூ.8,300 கோடி முதலீடு செய்ய உள்ளது வெல்ஸ்பன்.

” சூரிய மின்சக்தி திட்டங்களை குஜராத்தில் மேற்கொள்ள அந்த மாநிலத்தின் தட்ப வெட்ப சூழ்நிலை மட்டுமே காரணமல்ல, முதலீட்டுக்கு உகந்த இடமாகவும் குஜராத் இருக்கிறது’’ என்று அந்த நிறுவனத்தின் துணைத்தலைவர் வினீத் மிட்டல் குறிப் பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x