Published : 25 Dec 2014 03:03 PM
Last Updated : 25 Dec 2014 03:03 PM

ஏ.டி.எம். பயன்படுத்த கட்டணம் ஏன்? ரிசர்வ் வங்கிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி யின் ஏ.டி.எம்.-மை மாதத்துக்கு ஐந்து முறைக்கு மேல் பயன் படுத்தும்போது கட்டணம் விதித்துக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்தது.

இது குறித்து விளக்கம் கொடுக்குமாறு ரிசர்வ் வங்கிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

ரிசர்வ் வங்கி, இந்திய வங்கி களின் சங்கம் மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஆகியவை இந்த விஷயத்தில் தங்களது கருத்துகளை வரும் பிப்ரவரி 18-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித் திருக்கிறது.

இது தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கில், வங்கிகள் தேவையில்லாமல் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வரி விதிக்கிறது என்றும் நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.

இந்த பொதுநல வழக்கை வழக்கறிஞர்கள் ஸ்வாதி அகர்வால் மற்றும் விவேக் குமார் டான்டன் ஆகியோர் தொடர்ந்தார்கள்.

எஸ்.பி.ஐ. உள்ளிட்ட பல வங்கி கள் கட்டண அறிவிப்பை வெளி யிட்டன. இந்த கட்டணம் விதிமுறை களுக்கு எதிரானது, அநீதியானது என்று வழக்கறிஞர்கள் வாதாடி னார்கள். உலக அளவில் எந்த நாட்டிலும் வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் எடிஎம்-மை பயன்படுத்த கட்டுப் பாடு இல்லை, அதே சமயத்தில் அவர்கள் இலவசமாக தங்களது வங்கியின் ஏ.டி.எம்.யை பயன்படுத் தலாம் என்று டான்டன் தெரிவித்தார்.

ரிசர்வ் வங்கி ஏற்கெனவே தெரிவித்த கருத்திலிருந்து முரண் படுகிறது. ஏ.டிஎம். விஷயத்தில் சர்வதேச நடைமுறையை பின்பற்றுகிறோம் என்று மார்ச் 10,2008-ஆம் ஆண்டு சுற்றறிக்கை வெளியிட்டது. இப்போது ரிசர்வ் வங்கியே இந்த விஷயத்தில் முரண்படுகிறது என்றார்.

எந்த நாட்டிலும் வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் எடிஎம்-மை பயன்படுத்த கட்டுப்பாடு இல்லை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x