Published : 02 Aug 2017 09:59 AM
Last Updated : 02 Aug 2017 09:59 AM

இவரைத் தெரியுமா?- பால் அல்கலா

பியட் கிரைஸ்லர் ஆட்டோமொபைல் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பிராந்திய தலைமைச் செயல்பாட்டு அதிகாரி. 2017 ஜனவரி மாதத்திலிருந்து இந்த பொறுப்பில் உள்ளார்.

2015-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டுவரை பியட் கிரைஸ்லர் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமான குவான்ஸூ ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்தார்.

2015-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை கிரைஸ்லர் சீன மேம்பாட்டுக்கான துணைத் தலைவராக பணியாற்றினார்.

2012-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை இத்தாலியின் மஸராட்டி நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை துறையின் இயக்குநராக இருந்தார்.

பெய்ஜிங் ஜீப் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

கிரைஸ்லர் வெனிசுலா நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரியாக பணியாற்றியவர்.

1987-ல் இந்த நிறுவனத்தில் இணைந்தவர், வட அமெரிக்க சுதந்திர வர்த்தக நாடுகளுக்கான துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக் கழகத்தில் இளநிலை பட்டமும், டுயூக் பல்கலைக் கழகத்தில் நிர்வாகவியல் பட்டமும் பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x