Published : 16 Aug 2017 10:16 AM
Last Updated : 16 Aug 2017 10:16 AM

ஜன்தன் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 1,767 வாரிசுகளுக்கு விபத்து இழப்பீடு

பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா (பிஎம்ஜேடிஒய்) காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை 1,757 நபர்களின் வாரிசுகளுக்கு விபத்து காப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

பிஎம்ஜேடிஒய் திட்டத்தில் மொத்தம் 2,514 விபத்து காப்பீடு நஷ்ட ஈடு கோரிக்கைகள் வரப்பெற்றன. இந்த திட்டத்தின் கீழ் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ. 1 லட்சம் இழப்பீட்டுத்தொகை வழங்கப்படும். இந்த காப்பீட்டுத் திட்டம் 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.

கடந்த 4-ம் தேதி மொத்தம் 1,767 இழப்பீடு கோரிக்கைகளுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. 167 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. 544 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் அறிவிப்பு தெரிவிக்கிறது. இழப்பீடு கோரியவர்களின் விண்ணப்பங்களில் இதுவரை 36 பேரது இழப்பீட்டுத் தொகை தயாராக இருந்தபோதிலும் அது வாரிசுதாரர்களால் பெறப்படாமல் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎம்ஜேடிஒய் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 30 ஆயிரத்துக்கு ஆயுள் காப்பீடும் வழங்கப்படுகிறது.

இதன்கீழ் 4,165 விண்ணப்பங்களுக்கு காப்பீட்டுத் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 577 பேரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தின்கீழ் மொத்தம் 29.48 கோடி பேருக்கு காப்பீட்டு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 22.7 கோடி பேருக்கு ரூபே கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x