Published : 17 Aug 2017 10:06 AM
Last Updated : 17 Aug 2017 10:06 AM

22 காரட்டுக்கு மேற்பட்ட தங்க நகை ஏற்றுமதிக்கு தடை

22 காரட்டுக்கு மேற்பட்ட தங்க நகை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. 22 காரட்டுக்கு மேற்பட்ட தங்கத்தை ஏற்றுமதி செய்து, மீண்டும் இறக்குமதி வழியாக கொண்டு வருவது இதன் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. 22 காரட்டுக்கு மேற்பட்ட தூய தங்கம் தவிர ஆபரண நகைகள், தங்க காசுகள் மற்றும் இதர 22 காரட்டுக்கு மேற்பட்ட தயாரிப்புகளின் ஏற்றுமதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT) வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: வெளிநாட்டு வர்த்தக கொள்கை (2015-20)யில் சில வழிகாட்டுதல்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளது.

திருத்தப்பட்ட விதிமுறைகள்படி 8 காரட் தங்கம் முதல் அதிகபட்சம் 22 காரட் தங்கம் மற்றும் தங்க நகைகள் வரை ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படும். அதற்கு மேற்பட்ட தங்க நகைகள் உள்நாட்டு பயன்பாடுக்கு மட்டும் அனுமதிக்கப்படும். தவிர ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் மின்னணு பாகங்கள் தயாரிக்கும் தொழில்நுட்ப பூங்கா, மென்பொருள் பூங்கா, உயிரி தொழில்நுட்ப பூங்கா போன்றவற்றுக்கு அனுமதிக்கப்படும் என்று கூறியுள்ளது. இதன் மூலம் 22 காரட்டுக்கு மேற்பட்ட தங்கம் மற்றும் தங்க நகைகள் ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படுவது தடுக்கப்படுகிறது.

இந்த தடை குறித்து செய்தி வெளியிட்டுள்ள இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (FIEO), 22 காரட்டுக்கு மேற்பட்ட தங்க நகைகள் ஏற்றுமதிக்கான தடை என்கிற அரசின் முடிவால் இந்திய தங்க நகை ஏற்றுமதி தொழிலில் பாதிப்புகள் இருக்காது. ஆனால் சர்வதேச சந்தையில் இதற்கான தேவையில் சிறிதளது சரிவு இருக்கும் என்று கூறியுள்ளது.

இந்த அறிவிப்பு வந்துள்ள அதே வேளையில், தென் கொரியாவிலிருந்து தங்கம் இறக்குமதி அதிகரிப்பது கவலையளிப்பதாக தங்க வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தென் கொரியாவிலிருந்து தங்கம் இறக்குமதி செய்வது நடப்பாண்டில் ஜுலை 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரையில் 33.86 கோடி டாலராக உள்ளது. 2016-17 நிதியாண்டில் 47.04 கோடி டாலராக உள்ளது. தென் கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்துக்கு அடிப்படை சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x