Published : 05 Aug 2017 10:29 AM
Last Updated : 05 Aug 2017 10:29 AM

மோடியின் டிஜிட்டல் முயற்சிகள் உலக அளவில் சிறப்பானது: சிஸ்கோ தலைவர்

டிஜிட்டல் நோக்கங்களில் வரவேற்கத்தக்க முயற்சிகளை கொண்ட தலைவராக மோடி உள்ளார் என்று சிஸ்கோ நிறுவனத்தின் தலைவர் ஜான் சேம்பர்ஸ் கூறியுள்ளார். அமெரிக்க - இந்தியா தொழில் குழுவின் தலைவரான ஜான் சேம்பர் இது தொடர்பாக பேசியபோது,

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை முன்னோக்கி கொண்டு செல்கிறார். இந்தியா வேகமாக வளரும் நாடாக உருவாகும் என்றார். இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் மாற்றும் மோடியின் தொலைநோக்கு பார்வை உலகத்துக்கே முன்னுதாரணமாக உள்ளன. பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட நடவடிக்கைகளைபோல இந்தியாவின் நடவடிக்கை உள்ளது. இந்த நாடுகளின் வளர்ச்சியை நாம் நேரடியாகவே பார்க்கலாம் என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x