Last Updated : 21 Jul, 2017 04:37 PM

 

Published : 21 Jul 2017 04:37 PM
Last Updated : 21 Jul 2017 04:37 PM

காலாண்டில் இரட்டிப்பாகி 11.25 பில்லியன் டாலர்களுக்கு தங்கம் இறக்குமதி

நடப்பு ஆண்டின் முதலாம் காலாண்டில் தங்கம் இறக்குமதி இரட்டிப்புக்கும் அதிகமாகி 11.25 பில்லியன் டாலர்களுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல்-ஜூன் 2016-17-ல் தங்கம் இறக்கு மதி 4.90 பில்லியன் அமெரிக டாலர்களாக இருந்ததாக மத்திய வணிகத்துறை அமைச்சகத் தரவு ஒன்று தெரிவித்துள்ளது.

இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையில் தங்கம் இறக்குமதி அதிகரிப்பு தாக்கம் செலுத்தியுள்ளது.

நடப்பு ஆண்டு ஜூன் மாதத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை விட தங்கம் இறக்குமதி அதிகரித்து 2.45 பில்லியன் டாலர்களாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் 1.20 பில்லியன் டாலர்களாக இருந்தது.

இதனால் நாட்டின் வாணிபப் பற்றாக்குறை 12.96 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.

மாறாக ஜூன் மாதத்தில் வெள்ளி இறக்குமதி 28.6% குறைந்து 178 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது.

ஜுவெல்லரி தொழிற்துறையின் மிகப்பெரிய தேவையினால் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் உலகின் 2-வது பெரிய தங்க நகை நுகர்வோராக உள்ளது.

தற்போது தங்கம் இறக்குமதிக்கு 10% தீர்வை விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x