Published : 07 Jul 2017 11:12 AM
Last Updated : 07 Jul 2017 11:12 AM

அமேசான் இந்தியாவில் ரூ.1,680 கோடி முதலீடு

சர்வதேச இ-டெயில் நிறுவனமான அமேசான் இந்தியாவில் ரூ.1,680 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கிறது. இந்திய பிரிவை பலப்படுத்துவதற்காக இந்தத் தொகையை முதலீடு செய்வதாக அமேசான் அறிவித்திருக்கிறது.இந்த நிறுவனம் இந்தியாவில் 500 கோடி டாலர் முதலீடு செய்வதாக சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக இந்த தொகை இருக்கும். இந்த தொகை கடந்த மாதமே முதலீடு செய்யப்பட்டிருப்பதாக தெரிய வந்திருக்கிறது.

இந்தியாவில் இ-காமர்ஸ் துறை வளர்ச்சி அடையும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அதனால் அதற்கு தேவையான தொழில்நுட்பத்துக்காக தொடர்ந்து முதலீடு செய்து வருகிறோம் என அமேசான் இந்தியாவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அமேசான் இந்தியாவுக்கு இதுவரை 200 கோடி டாலர் முதலீடு வந்திருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x