Published : 26 Jul 2017 09:34 AM
Last Updated : 26 Jul 2017 09:34 AM

ஹெச் 1 பி பிரீமியம் விசாவுக்கு விரைவில் அனுமதி: அமெரிக்க குடியேற்றத்துறை அறிவிப்பு

ஹெச்1 பி பிரிமியம் விசாவுக்கான அனுமதி விரைவில் அளிப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கப்படும் என அமெரிக்க அறிவித்துள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டியும் இந்திய மென்பொறியாளர்கள் மற்றும் உயர் திறன் பணியாளர்கள் இந்த பிரிவு விசாவில் அமெரிக்கா செல்கின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி நிறுவனங்களுக்குச் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹெச் 1 விசா என்பது அமெரிக்காவில் வசிப்பதற்கான தற்காலிக குடியுரிமை கொண்டது. அமெரிக்க நிறுவனங்கள் தனித்திறன் கொண்ட வெளிநாட்டு பணியாளர்களை பணியமர்த்த இந்த விசா வழங்கப்படுகிறது. இந்த வகையில் அமெரிக்காவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆண்டு தோறும் பத்து முதல் ஆயிரத்துக்கு மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்தி வருகின்றன.

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஹெச் 1 பி விசா தவறாக கையாளப்படுவதாகக் கூறி இதற்கான அனுமதி மற்றும் குடியேற்ற விதிகளை கடுமையாக்கினார். அமெரிக்க தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்பு, சம்பள விகிதம் போன்றவற்றை பாதுகாக்கும் விதமாக அமெரிக்கர்ளை பணியமர்த்துவோம் என்கிற கொள்கையை அமெரிக்கா செயல்படுத்தும் என்றும் ட்ரம்ப் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்றத்துறை சேவை அமைப்பு நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், விரைவில் ஹெச் 1 பி பிரீமியம் விசா விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை தொடங்கும் என்று குறிப்பிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த விசா அனுமதி 65,000 எண்ணிக்கையில் இருக்கும். அதுபோல அமெரிக்காவில் உயர்கல்விக்கான விசா 20,000 விண்ணப்பங்களுக்கு அனுமதிக்கப்படும்.

அமெரிக்க குடியுரிமை அமைப்பின் அறிக்கைபடி, அமெரிக்காவில் உயர்கல்விக்கான ஹெச் 1 விசா அனுமதிப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என தெரிகிறது. மேலும், லாப நோக்கமில்லாத கல்வி நிறுவனங்கள் , ஆராய்ச்சி மற்றும் அரசு ஆராய்ச்சி அமைப்புகளுக்கு ஹெச் 1 பி விசா விண்ணப்பதாரர்கள் அனுமதிப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என கூறியுள்ளது.

இதற்கு முன்னதாக ஜூன் 26-ம் தேதி மருத்துவர்களை அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக அறிவித்திருந்தது. பிரீமியம் விசா விண்ணப்பங்களுக்கான விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும். அதுவரையில் இதர ஹெச் 1பி விசாவுக்கான விண்ணப்பங்கள் பரிசீலனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x