Published : 11 Jul 2017 11:01 AM
Last Updated : 11 Jul 2017 11:01 AM

இவரைத் தெரியுமா?- ஜேம்ஸ் குட்நைட்

உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான எஸ்ஏஎஸ் (SAS) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் இணை நிறுவனர். 1976-ம் ஆண்டிலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

அமெரிக்க புள்ளியியல் நிறுவனத்தில் உறுப்பினராக இருந்து வருகிறார்.

2016-ம் ஆண்டு நிலவரப்படி இவரின் மொத்த சொத்து மதிப்பு 880 கோடி டாலர்.

வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பிரிவில் பட்டம் பெற்றவர். மேலும் புள்ளியியல் பாடப் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர்.

2013-ம் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில் 154-வது இடத்தை பிடித்தவர்.

போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட 400 பணக்கார அமெரிக்கர்கள் பட்டியலில் 58-வது இடத்தை பிடித்தவர்.

எஸ்ஏஎஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் உறுப்பினராக இருந்து வருகிறார்.

அமெரிக்காவின் சிறந்த தொழில்முனைவோர்கள் பட்டியலில் 25-வது இடத்தை பிடித்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x