Published : 20 Mar 2014 12:43 PM
Last Updated : 20 Mar 2014 12:43 PM

இன்ஃபோசிஸ், டிசிஎஸ் பங்குகள் சரிவு

மும்பை பங்குச் சந்தையில் இன்ஃபோசிஸ், டிசிஎஸ் நிறுவனப் பங்குகள் புதன்கிழமை கடுமையான சரிவைச் சந்தித்தன. இந்நிறுவனங்களின் எதிர்கால வளர்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்ற முதலீட்டாளர்கள் கருதியதே இவ்விரு நிறுவனப் பங்குகளின் வீழ்ச்சிக்குப் பிரதான காரணமாகும். இருப்பினும் பங்குச் சந்தை குறியீட்டெண் எவ்வித மாற்றமும் இன்றி 21832 என்ற நிலையில் இருந்தது.

மேலும் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ்வின் குறைப்பு நடவடிக்கை குறித்த அறிவிப்பு புதன்கிழமை இரவு வெளியாக உள்ளது. இதுவும் இவ்விரு நிறுவன பங்கு விலைச் சரிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

மார்ச் மாத காலாண்டு நிதி நிலை மந்தமாக இருக்கும் என டிசிஎஸ் கூறியதால் அந்நிறுவனப் பங்குகள் 3.84 சதவீத சரிவைச் சந்தித்தது. மும்பை பங்குச் சந்தையில் முக்கியமான 30 முன்னணி நிறுவனப் பங்குகளில் அதிகபட்ச சரிவைச் சந்தித்தது டிசிஎஸ் பங்குகளே ஆகும்.

இதற்கு அடுத்தபடியாக இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்கு விலை 2.32 சதவீதம் சரிந்தது. இருப்பினும் ஹெச்டிஎப்சி, ஆக்ஸிஸ் வங்கி, ரிலையன்ஸ் இண் டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், ஹெச்டி எப்சி வங்கி, ஹிண்டால்கோ, சீசா ஸ்டெர்லைட் ஆகிய நிறுவனங் களின் பங்கு விலைகள் உயர்ந்த தால் பங்குச் சந்தை குறியீட்டெண் ணில் எவ்வித மாற்றமும் இல்லாத நிலை ஏற்பட்டது.

தேசிய பங்குச் சந்தையில் 7 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட் டெண் 6524 புள்ளிகளானது. ஆசிய பிராந்தியத்தில் உள்ள பங்குச் சந்தைகளில் ஸ்திரமற்ற நிலை காணப்பட்டது. உக்ரைன் விவகாரத்தால் இந்த நாடுகளின் பங்குச் சந்தைகளில் இத்தகைய போக்கு ஏற்பட்டது. மேலும் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ்வின் அறிவிப்புக்காக முதலீட்டாளர்கள் எச்சரிக்கையான போக்கைக் கடைப்பிடித்தனர். அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் கடன் பத்திரங் களைத் திரும்பப் பெறும் அளவை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிய சந்தைகளில் ஜப்பான் பங்குச் சந்தையில் மட்டும் சிறிதளவு ஏற்றம் காணப்பட்டது. ரஷியாவுக்கு எதிரான சர்வதேச தடைகள் மேலும் அதிகரிக்கும் என இப்பிராந்தியத்தில் உள்ள முதலீட்டாளர்கள் கருதியதும் பிற பங்குச் சந்தைகளில் சரிவுக்குக் காரணமானது. குறிப்பாக தென் கொரியா, தைவான், சிங்கப்பூர், ஹாங்காங், சீனா சந்தைகளில் சரிவே காணப்பட்டது.

இந்தியாவில் பணவீக்கம் குறைந்ததால் முதலீட்டாளர்கள் அடுத்த கட்டமாக ரிசர்வ் வங்கி யின் காலாண்டு நிதிக் கொள் கையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டுள்ளனர். ஏப்ரல் 1-ம் தேதி வெளியாக உள்ள ரிசர்வ் வங்கி நிதிக் கொள் கையில் கடனுக்கான வட்டி குறைக்கப் பட்டால் பங்குச் சந்தை மேலும் ஊக்கம்பெறும் என்ற எதிர் பார்ப்பே இதற்கு முக்கியக் காரணமாகும். நிறுவனங்களுக்கு தாராளமாகக் கடன் கிடைப்பதால் நிறுவனங்களின் பங்கு விலைகள் உயரும் என சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மும்பை பங்குச் சந்தையில் முக்கியமான 30 நிறுவனங்களில் 20 நிறுவனப் பங்குகள் ஏற்றம் பெற்றன. 10 நிறுவனப் பங்குகளே சரிவைச் சந்தித்தன.

டாடா ஸ்டீல் (4.58%), ஹிண்டால்கோ (4.44%) ஆக்ஸிஸ் வங்கி (2.78%), சீசா ஸ்டெர்லைட் (2.09%), ஹெச்டிஎப்சி (1.77%), பார்தி ஏர்டெல் (1.35%), ஐடிசி (1.03%), சன் பார்மா (1.03%) அளவுக்கு ஏற்றம் பெற்றன.

ஒஎன்ஜிசி (3.22%), மஹிந்திரா அண்ட் மஹிந்திரா (2.79%), கோல் இந்தியா (2.63%), கோல் இந்தியா (2.53%), கெயில் (2.53%), டாடா பவர் (1.87%), என்டிபிசி (1.57%) அளவுக்கு சரிவைச் சந்தித்தன.

மொத்தம் 1,458 நிறுவனப் பங்குகள் லாபம் ஈட்டின,. 1,342 நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித் தன. 152 நிறுவனப் பங்குகளில் எவ்வித மாற்றமும் இல்லை. மொத்த வர்த்தகம் ரூ. 2,579 கோடியாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x