Published : 04 Aug 2016 09:44 AM
Last Updated : 04 Aug 2016 09:44 AM

ஜிஎஸ்டி-க்கு தயார் ஆகாத நிறுவனங்கள்

இந்தியாவின் முக்கிய வரி சீர்த்திருத்தமான சரக்கு மற்றும் சேவை வரி மசோதா (ஜிஎஸ்டி) மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றுவதில் அரசி யல் ரீதியாக பல்வேறு குழப்பங் கள் நிலவிவந்த நிலையில் தற் போது பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தற்போது ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப் படுவதற்குரிய சாத்தியக்கூறுகள் அதிகமாகியுள்ளன. ஆனால் ஜிஎஸ்டி சட்டத்திற்கு ஏற்ப இன்னும் தயார்படுத்திக் கொள்ளாமல் பல நிறுவனங்கள் உள்ளன. மேலும் பல நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி சட்ட மசோதா குறித்த சந்தேகங்கள் நிறைய எழுந்துள்ளன.

ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப் பட்டால் அடுத்த ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வரலாம். ஆனால் பல நிறுவனங்கள் இந்த ஜிஎஸ்டி சட்டத்திற்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக் கொள்ளவில்லை. பல நிறுவனங்களின் தலைவர்கள், ஜிஎஸ்டி சட்டத்தை எப்படி சமாளிப்பது என்று ஆலோசனைகளை கேட்டறிந்து வருகின்றனர்.

இந்தியா 2,00,000 கோடி டாலர் மதிப்புடைய பொருளாதாரமாக இருக்கிறது. 130 கோடி நுகர்வோர்கள் உள்ளனர். ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டால் இவ்வளவு பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டுக்கு ஒரே மாதிரியான வரியை கொண்டுவருவது இதுவே முதல் முறையாக இருக்கும்.

அதே நேரத்தில் ஜிஎஸ்டியை நாட்டில் அமல்படுத்துவதற்கு பல நிலைகளில் தயாராக வேண்டியுள் ளது. மிகப் பெரிய தகவல் தொழில் நுட்ப சேவைகளை அமைக்க வேண்டும். வரி விதிப்பவர் களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். நிறுவனங்களை விரைவாக ஜிஎஸ்டி வரி விதிப்புக்குள் கொண்டு வர வேண்டும்.

நாங்கள் இன்னும் ஜிஎஸ்டி வரி முறைக்கு தயாராகவில்லை என்று ரோமார் ஊலன் மில்ஸ் தலைவர் ஜிஆர். ரால்ஹான் தெரிவித்துள்ளார். நிறுவனங்கள் அதிலும் குறிப்பாக சிறிய நிறுவனங்கள் கவலையில் இருக்கின்றன. நாங்கள் ஜிஎஸ்டி வரி விகிதத்தை அதிகமாக விதிக்குமாறு பலமுறை வலியுறுத்திருக்கிறோம் என்று ரால்ஹான் தெரிவித்தார்.

20 சதவீத பெரிய நிறுவனங்கள் மட்டுமே ஜிஎஸ்டி வரி முறைக்கு தயாராகி இருப்பதாக வரித்துறை நிபுணர்கள் கூறுகின்றனர். மீதம் உள்ள நிறுவனங்கள் ஜிஎஸ்டி வந்த பிறகு சமாளித்து கொள்ளலாம் என்ற நிலையில் இருந்து வருகின்றன. மேலும் ஜிஎஸ்டி நடைமுறைக்கு வர காலதாமதம் ஆகும் என்று சில நிறுவனங்கள் நினைக்கின்றன.

மத்திய அரசு 2017-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து ஜிஎஸ்டியை நடைமுறைக்கு கொண்டு வர இலக்கு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத் தக்கது.

ஜிஎஸ்டி வரி விகிதம்

மோடி அரசு ஜிஎஸ்டி வரி விகிதம் 18 சதவீதமாக நிர்ணயிக்க சாதகமாக இருந்து வருகிறது. ஆனால் பல்வேறு மாநிலங்கள் இதை ஒப்புக் கொள்ளவில்லை.

20 சதவீதத்திற்கு மேல் ஜிஎஸ்டி வரி விகிதம் இருக்காது என்று நான் கருதுகிறேன் என்று எர்ன்ஸ்ட் யங் நிறுவனத்தின் மறைமுக வரி பிரிவின் தலைவர் ஹரிசங்கர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி குறித்த விவரங்கள் தெளிவாக தெரியாததால் டெலி காம், பைனான்ஸியல் சர்வீசஸ், இ-காமர்ஸ் ஆகிய துறை நிறுவனங் கள் கவலையில் இருக்கின்றன.

சேவை நிறுவனங்கள் ஜிஎஸ்டியை ஒரு பாம்பை பார்ப்பது போல் பார்க்கின்றன என்று கிராண்ட் தோர்ண்டான் மறைமுக வரி பிரிவு தலைவர் அமித் குமார் சங்கர் தெரிவித்துள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x