Published : 01 Nov 2014 10:43 AM
Last Updated : 01 Nov 2014 10:43 AM

65 கோடீஸ்வரர்களுக்கு சொத்து வரி விதித்தால்: 9 கோடி மக்களின் வறுமையைப் போக்கலாம்

நாட்டிலுள்ள பெரும் பணக்காரர்களுக்கு சொத்து வரியாக 1.5 சதவீதம் விதிப்பதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 9 கோடி மக்களின் வறுமையைப் போக்க முடியும். இதன் மூலம் ஏழை, பணக்காரர்கள் இடையிலான இடைவெளியைக் குறைக்க முடியும் என்று ஆக்ஸ்ஃபாம் இந்தியா நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

நாட்டிலுள்ள சூப்பர் ரிச் எனப்படும் பெரும் பணக் காரர்களுக்கு சொத்து வரியாக 1.5 சதவீதம் வசூலிப்பதன் மூலம் வறுமை நிலையில் உள்ள 9 கோடி பேரின் ஏழ்மை நிலையை மாற்ற முடியும் என்று அந்நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.

1990-களில் 2 பேராக இருந்த கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2014-ம் ஆண்டில் 65 ஆக உயர்ந்துள்ளது. இவர்களின் மொத்த சொத்து மதிப்பின் அடிப்படையில் சொத்து வரி விதித்தால் அதன் மூலம் 9 கோடி பேரின் வறுமை ஒழியும் என்று ஆக்ஸ்ஃபாம் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி நிஷா அகர்வால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மேற்கொள்ளப் படும் பெரும்பாலான நேரடி அந்நிய முதலீடு அனைத்துமே வரி விலக்கு பெற்று செய்யப்படுகிறது. அத்துடன் அரசு ராணுவத்துக்கும் சுகாதாரத்துக்கும் அதிக அளவில் செலவிடுகிறது.

ஏழை, பணக்காரர்கள் இடை யிலான இடைவெளியைக் குறைக்க ஒதுக்கப்படும் நிதி வரி சலுகைகள் மற்றும் பொதுத் துறை தனியார் முதலீட்டுத் திட்டங் களுக்கு திருப்பி விடப்படு வதாகவும் அறிக்கை குறிப்பிட் டுள்ளது.

பன்னாட்டு நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதை உடனடியாகத் தடுக்க வேண்டும். அதேபோல பெரும் செல்வந்தர்கள் வரி ஏய்ப்பைத் தடுக்க வேண்டியது உடனடியாக செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. அதே போல சர்வதேச நிறுவனங்கள் உரிய வரியை செலுத்துகின் றனவா என்று கண்காணிப்பதோடு தனி நபர்கள் உரிய வரியை செலுத்துகின்றனரா என்று கவனிக்க வேண்டும் என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.

இந்தியா உள்ளிட்ட ஆசிய பசிபிக் நாடுகளில் ஏழை- பணக் காரர்களிடையிலான இடைவெளி அதிகரித்து வருவதையும் குறிப் பிட்டுள்ளது.

வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை 2004-2005-ம் ஆண்டு 37.2 சதவீதமாக இருந்தது. இந்த எண்ணிக்கை 2011-12-ம் ஆண்டு கணக்கெடுப்பில் 21.9 சதவீதமாகக் குறைந்துவிட்டது என்று அரசு வெளியிட்ட அறிக்கை குறிப்பிடுகிறது.

2011-12-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி நகர்ப்பகுதிகளில் வாழும் தனிநபர் வருவாய் மாதத்துக்கு ரூ. 1,000 ஆகவும், இது கிராமப்பகுதிகளில் வாழ்பவர்களின் சராசரி மாத வருமானம் ரூ. 816 ஆகவும் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி நகர்ப்பகுதிகளில் தினசரி ரூ. 33.33 ஈட்டுவோரும் கிராமங்களில் ரூ. 27.20 ஈட்டு வோரும் ஏழைகளாகக் கருதப் படமாட்டார்கள் என வரை யறுக்கப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x