Published : 17 Mar 2017 09:46 AM
Last Updated : 17 Mar 2017 09:46 AM

வட்டி விகிதத்தை உயர்த்தியது அமெரிக்க பெடரல் ரிசர்வ்

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தியுள்ளது. 2008-ம் ஆண்டு சர்வதேச பெருமந்த நிலைக்குப் பிறகு மூன்றாவது முறையாக அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை 0.75 சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

நிலையான பொருளாதார வளர்ச் சியை அடையவும், வலுவான முறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், பணவீக்கம் உயர்த் துவதற்காகவும் வட்டி விகிதம் உயர்த்தப்படுவதாக பெடரல் தலை வர் ஜெனட் ஏலன் தெரிவித்தார். மேலும் இந்த ஆண்டில் இருமுறை வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்பு இருப்பதாக கூறினார். 2015-ம் ஆண்டு மற்றும் 2016-ம் ஆண்டில் தலா ஒரு முறை மட்டுமே வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது.

கடந்த சில மாதங்களாகவே நாங் கள் எதிர்பார்த்தது போல் பொருளா தாரம் வளர்ச்சியடைந்து வருகிறது. இனியும் நல்ல நிலையில் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று ஏலன் தெரிவித்தார். இரண்டு நாட் கள் நிதிக் கொள்கை கூட்டத்திற்கு பின்பு புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் வட்டி விகித உயர்வை பற்றி அறிவித் தார்.

எதிர்பார்த்தது போல் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இந்த வட்டி விகித உயர்வு அடுத்த மாதம் அறிவிக்கவுள்ள ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை முடிவில் பாதிப்பை ஏற்படுத்தாது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

``கடந்த ஆறு வருடங்களில் இல்லாத அளவுக்கு ரெபோ விகிதம் 6.25 சதவீதத்தில் உள்ளது. இனி இந்தியாவில் வட்டி விகிதத்தை குறைப்பதற்கு வாய்ப்பில்லை. பெடரல் ரிசர்வ் வட்டி விகித உயர்வு ரிசர்வ் வங்கி முடிவுகளில் தாக் கத்தை ஏற்படுத்தாது. உள்நாட்டு பொருளாதார சூழல்களே எதிர் வரும் நிதிக் கொள்கை முடிவு களில் தாக்கத்தை ஏற்படுத்தும்’’ என்று எல் அண்ட் டி பைனான்ஸ் ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர் ரூபா ரீகெ தெரிவித் துள்ளார்.

ரூபாய் மதிப்பு உயர்வு

யாரும் எதிர்பாராத வகையில் நேற்று டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 28 பைசா உயர்ந்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் டாலருக்கு நிகரான இந்திய ரூபா யின் மதிப்பு 65.41 பைசாவாக முடி வடைந்தது. கடந்த 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரூபாயின் மதிப்பு நேற்று உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பெடரல் ரிசர்வ் வட்டி விகிதம் உயரும் என்று அனைவரும் எதிர் பார்த்ததால் அந்நிய முதலீடுகள் இந்திய சந்தையிலிருந்து வெளி யேறவில்லை. இதுவே ரூபாய் உயர்ந்ததற்கு காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.மேலும் ஆசிய சந்தைகளின் உயர்வும் ரூபாய் மதிப்பு உயர்ந்ததற்கு காரணமாக கூறப்படுகிறது.

வலுவான நிலையில் இந்திய பங்குச் சந்தை

பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தியதற்காக முதல் முறையாக இந்திய பங்குச் சந்தைகள் நேற்று ஏற்றத்தை கண்டன. இந்த ஆண்டில் மேலும் இருமுறை மட்டுமே வட்டி விகித உயர்வு இருக்கும் என பெடரல் ரிசர்வ் கூறியுள்ளதால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டன. நேற்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 187.74 புள்ளிகள் உயர்ந்து 29,585 என்ற புள்ளியில் முடிவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 68.90 புள்ளிகள் உயர்ந்து 9,153 புள்ளியில் முடிவடைந்தது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x