Published : 29 Mar 2014 11:45 AM
Last Updated : 29 Mar 2014 11:45 AM

நிலேஷ் குப்தா - இவரைத் தெரியுமா?

$ மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் லுபின் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இந்த பொறுப்பில் இருக்கிறார்.

$ இவரது தந்தை தேஷ் பந்து குப்தாவால் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தில் இவரது சகோதரி வினிதா குப்தா இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கிறார்.

$ மும்பையில் இருக்கும் கல்லூரியில் (யூ.டி.சி.டி) கெமிக்கல் இன்ஜினீயரிங் முடித்தவர். பென்சில்வேனியாவில் இருக்கும் வார்டன் பள்ளியில் நிதி, ஹெல்த்கேர் மற்றும் மேலாண்மை பயின்றவர்.

$ இப்போதைய சூழ்நிலையில் வளர்வது முக்கியமல்ல, எவ்வளவு வேகமாக வளர்கிறோம் என்பதுதான் முக்கியம் என்று நிர்வாக இயக்குநர் பொறுப்பு ஏற்கும்போது தெரிவித்தவர்.

$ சொல்லியதை செயல்படுத்துவது போல விரைவான வளர்ச்சியை எட்டிவரும் (25 சதவீதத்துக்கு மேல்) மெக்ஸிகோவில் இருக்கும் பார்மா நிறுவனத்தை கையகப்படுத்தி இருக்கிறார். பிரேசிலில் உள்ள நிறுவனங்ளை வாங்குவதற்கான வாய்ப்பையும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x