Published : 12 Apr 2017 10:15 AM
Last Updated : 12 Apr 2017 10:15 AM

இவரைத் தெரியுமா?- ரகில் அன்சாரி

ஆடி இந்தியா நிறுவனத்தின் தலைவர். பிப்ரவரி 1-ம் தேதியிலிருந்து இந்த பொறுப்பில் இருக்கிறார். நிறுவனத்தின் விநியோகச் செயல்பாடுகள் பிரிவின் இயக்குநராக இருந்தார்.

இதற்கு முன்பு ஆடி ஏஜி நிறுவனத்தின் உதிரிபாகங்கள் பிரிவின் சர்வதேச தலைவராக பணியாற்றியவர்.

2006-ம் ஆண்டு ஜூன் முதல் 2008-ம் ஆண்டு மே மாதம் வரை ஆடி ஏஜி நிறுவனத்தின் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை நாடுகளுக்கான விற்பனை மேலாளராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

2008-ம் ஆண்டு ஜூன் முதல் 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை ஆஸ்டின் மார்டின் நிறுவனத்தின் வடக்கு தெற்கு ஐரோப்பிய பிராந்திய மேலாளராக பணியாற்றினார்.

விற்பனை, விநியோகச் சங்கிலி, சில்லரை வர்த்தகச் செயல்பாடு கள், விற்பனைக்கு பிறகான சேவை உள்ளிட்டவற்றில் வல்லுநர்.

பிரான்சில் உள்ள இஎஸ்சி - செயிண்ட் எடினே பிசினஸ் பள்ளியில் பிபிஏ பட்டமும், ஸ்வீடனில் உள்ள மிட் பல்கலைக்கழகத்தில் வணிக பொருளாதாரத்தில் உயர்கல்வியும் முடித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x