Published : 16 Feb 2017 10:09 AM
Last Updated : 16 Feb 2017 10:09 AM

இவரைத் தெரியுமா?- சந்தீப் ஜஜோடியா

தொழில் துறை அமைப்பான அசோசேம் அமைப்பின் புதிய தலைவர். கடந்த திங்கள் கிழமை முதல் இந்த பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர். இதற்கு முன்பு அசோசேம் அமைப்பின் மூத்த துணைத் தலைவர், தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்துள்ளார்.

1966-ல் பிறந்தவர். மூன்நெட் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர். ஓம் பிரகாஷ் ஜிண்டாலில் மருமகன். தனது நிறுவனத்தை சுரங்கம், உலோகம், மின் உற்பத்தி துறைகளில் முக்கிய நிறுவனமான வளர்க்க இலக்கு வைத்துள்ளார்.

ஸ்பான்ஞ் இரும்பு உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர்.

விளையாட்டு ஆர்வலர். இந்திய குத்துச் சண்டை கழகத்தின் முதல் தலைவராகவும் இருந்தவர். இந்திய குத்துச் சண்டை குழுவுக்கு அதிகாரபூர்வமான ஸ்பான்சராகவும் உள்ளார்.

கிரிக்கெட்டுக்கு மாற்றாக விளையாட்டுகளை வளர்க்க மூன் நெட் ஸ்போர்ட்ஸ் அறக்கட்டளையை தொடங்கியுள்ளார்.

டெல்லி பல்கலைக் கழகத்தில் வணிகவியல் பட்டம் பெற்றவர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x