Published : 13 Apr 2017 11:52 AM
Last Updated : 13 Apr 2017 11:52 AM

இந்திய சந்தையில் களமிறங்கும் மோரிஸ்

உயவு எண்ணெய் தயாரிப்பில் சர்வதேச அளவில் முன்னணி நிறுவனமான மோரிஸ் லூப்ரிகன்ட் நிறுவனம் இந்திய சந்தையில் களமிறங்குவதாக நேற்று அறிவித்துள்ளது.

``இந்திய சந்தையில் விற்பனைக்காக அமல்கமேஷன்ஸ் குழுமத்தின் ஜார்ஜ் ஓக்ஸ் நிறுவனத்தை மார்க்கெட்டிங் மற்றும் விநியோக பங்களிப்பாளராக தேர்ந்தெடுத்துள்ளதாக’’ மோரிஸ் லூப்ரிகன்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஆண்ட்ரு விக்கின்ஸ் தெரிவித்தார்.

``இந்தியாவில் எங்களது விற்பனையைத் தொடங்குவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே வரலாற்று ரீதியாக வலுவான வர்த்தக பிணைப்பு இருந்து வருகிறது. இந்தியா மிக முக்கியமான நாடுகளுள் ஒன்று. அதனால் அதிக கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. உயவு எண்ணெய் சந்தையை பொறுத்தவரை சர்வதேச அளவில் மூன்றாவது பெரிய சந்தையாக உள்ளது. எங்களுடைய வாடிக்கையாளர்களை சென்று சந்திக்க இருக்கிறோம். எங்களுடைய தயாரிப்புகளை கன ரக லாரிகள், டிராக்டர், இரு சக்கர வாகனங்களில் பயன்படுத்தப் முடியும்’’ என்று தெரிவித்தார்.

இங்கிலாந்தை மையமாக கொண்டு இயங்கும் மோரிஸ் லூப்ரிகன்ட் நிறுவனம் 85 நாடுகளுக்கு உராய்வு எண்ணெய்யை ஏற்றுமதி செய்துவருவது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் ஆண்டிற்கு 50 மில்லியன் டன் உயவு எண்ணெய்யை உற்பத்தி செய்து வருகிறது. இரண்டு உற்பத்தி ஆலைகளும் இங்கிலாந்தில் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x