Published : 13 Feb 2017 10:14 AM
Last Updated : 13 Feb 2017 10:14 AM

ஜூம் ஏர் விமான போக்குவரத்து தொடக்கம்

மண்டல விமான நிறுவனமான ஜூம் ஏர் தன்னுடைய முதல் போக்கு வரத்தை நேற்று தொடங்கியது. மண்டல அளவில் செயல்படும் ஆறாவது விமான நிறுவனம் இதுவாகும். நேற்று புதுடெல்லியில் இருந்து துர்காபூருக்கு முதல் போக்குவரத்தை தொடங்கியது. வரும் 15-ம் தேதி முதல் வர்த்தக ரீதியிலான போக்குவரத்து தொடங்கும் என அறிவிக்கப்பட் டிருக்கிறது. மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ போக்குவரத்தினை தொடங்கி வைத்தார்.

மொத்த விமான போக்கு வரத்து சந்தையில் மண்டல விமான நிறுவனங்கள் 1.2 சதவீத சந்தையை மட்டும் வைத்துள்ளன.

விஜயவாடா, திருப்பதி, ராஞ்சி மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்களுக்கு தேவை அதிகமாக இருக்கிறது. சீரான சேவை வழங்கும் பட்சத்தில் ஆண்டுக்கு 20 சதவீத வளர்ச்சி இருக்கும் என நாங்கள் கணிக்கிறோம் என ஜூம் ஏர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கவுஸ்தவ் மோதன் தர் தெரிவித்தார்.

இதுவரை ரூ.20 கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களில் மேலும் ரூ.20 கோடி நிதி திரட்ட இருக்கிறோம். இந்த நிதி விமான விரிவாக்கத்துக்கு பயன்படும். தற்போது மூன்று விமானங்கள் உள்ளன. வரும் ஏப்ரலில் இரண்டு விமானங்கள் இணைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

விமான போக்குவரத்து தொடங்குவதற்கு இம்மாத ஆரம்பத்தில் இந்த நிறுவனத்துக்கு விமான போக்குவரத்து துறை இயக்குநரகம் அனுமதி வழங் கியது.

தற்போது, ஏர் கோஸ்டா, ட்ரூ ஜெட், அலையன்ஸ் ஏர் மற்றும் ஏர் கார்னிவெல் ஆகிய நிறுவனங்கள் மண்டல விமான நிறுவனங்களாக செயல்பட்டு வருகின்றன. ஏர் பெகாசஸ் விமானம் கடந்த சில மாதங்களாக செயல்பட வில்லை.

இது தவிர ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ், விஸ்தாரா, இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், கோ ஏர், மற்றும் ஏர் ஏசியா ஆகிய உள்நாட்டு விமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x