Last Updated : 15 Apr, 2017 10:23 AM

 

Published : 15 Apr 2017 10:23 AM
Last Updated : 15 Apr 2017 10:23 AM

‘பீம்’ செயலியை பரிந்துரைத்தால் ரூ.10 ‘கேஷ் பேக் ஆஃபர்’: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

ரொக்க பணபரிவர்த்தனைக்கு மாற்றாக டிஜிட்டல் பரிவர்த் தனையை ஊக்குவிக்கும் பொருட்டு பிரதமர் நரேந்திர மோடி புதிய சலுகைத் திட்டத்தை அறிவித்துள்ளார். டாக்டர் அம்பேத் கரின் 126-வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், டிஜிதன் திட்டமானது டிஜிட்டல் பரிவர்த்தனையை முன் னெடுத்துச் செல்லும் திட்டமாகும். பீம் செயலியை மற்றவர்களுக்குப் பரிந்துரைத்தால் ரூ.10 பரிந்துரைப் பவரின் கணக்கில் சேர்க்கப்படும். இத்தகைய `கேஷ் பேக் ஆஃபரை’ வர்த்தகர்களுக்கும் மோடி விரிவுபடுத்தியுள்ளார்.

டிஜிதன் திட்டமானது பண பரிவர்த்தனையில் தூய்மையை உருவாக்கும் திட்டமாகும். இது ஊழலை ஒழிப்பதற்கு உதவும் என்று குறிப்பிட்ட மோடி, இளைஞர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனையை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்றார். ஒரு நாளைக்கு 20 பேரை பீம் செயலிக்கு பரிந்துரைத்தால் உங்களுக்கு ரூ. 200 கிடைக்கும் என்றார். நாட்டில் பெருமளவிலான மக்கள் தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறியுள்ளதற்கு நன்றி தெரிவித்த அவர், இதனால் டிஜிதன் இயக்கம் வலுப்பெற்றுள்ளது என்றார்.

ஆதார் அடிப்படையிலான மொபைல் செயலியான பீம் குறித்து பேசிய அவர், இது நாட்டில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மொபைல் போன் மூலம் நிதி பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும் என்ற சூழலை உருவாக்கியுள்ளோம். இந்த செயலியை தேசிய பேமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்பிசிஐ) உருவாக்கியுள்ளது. இது ஆதார் எண்ணுடன் இணைந்த பீம் செயலியாகும். இது ஒருங்கிணைந்த பண பரிவர்த்தனைக்கான செயலி (யுபிஐ) என்று அவர் குறிப்பிட்டார். 2016-ம் ஆண்டு டிசம்பரில் பீம் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. மார்ச் மாதத்தில் ஆதார் பே அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் செயலியாகும். பீம்-ஆதார் செயலியானது டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு ஏற்றதாகும்.

இதன் மூலம் உபயோகிப்பாளர் கள் வெறும் கட்டைவிரல் பதிவு மூலம் பரிவர்த்தனை செய்ய முடியும்.

ஒரு காலத்தில் படிக்காதவர்கள் பெருவிரல் ரேகையை சான்றளிப்பர். டிஜிட்டல் யுகத்தில் உங்கள் கைவிரல் ரேகை பரிவர்த்தனைக்கு உதவுகிறது. இப்போது கைவிரல் ரேகை பதிவானது உங்களது வளத்தைக் காட்டும் என்று மோடி குறிப்பிட்டார்.

டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க ரூ.250 கோடி பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விருது பெற்றவர்கள்தான் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான தூதர்களாக செயல்படவேண்டும் என்றார்.

நாட்டின் குடிமகன் யாராக இருப்பினும் அவரிடம் ஸ்மார்ட்போனோ, இணைய தள இணைப்போ, கடன் அட்டையோ இருக்க வேண்டும் என்பது அவசியமல்ல. டிஜிட்டல் பரிவர்த்தனையை இவை இருந்தால்தான் மேற்கொள்ள முடியும் என்ற நிலையை ஆதார் அடிப்படையிலான பீம் செயலி உருவாக்கியுள்ளது என்றார்.

மஹாராஷ்டிர மாநிலம் லத் தூரைச் சேர்ந்த சாரதா எனும் பெண் டிஜிட்டல் பரிவர்த்தனைக்காக ரூ. 1 கோடி பரிசு பெற்றார். அவருக்கு மோடி ரொக்கப் பரிசை வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x