Last Updated : 11 Nov, 2014 10:00 AM

 

Published : 11 Nov 2014 10:00 AM
Last Updated : 11 Nov 2014 10:00 AM

எதிர்காலத்தில் ஏர் இந்தியா தனியார்மயம் ஆகலாம்: அமைச்சர் அசோக் கஜபதி ராஜு தகவல்

பொதுத்துறை நிறுவனமாக உள்ள ஏர் இந்தியா நிறுவனம் எதிர்காலத்தில் தனியார் நிறுவன மாகலாம். ஆனால் அத்தகைய நடவடிக்கை உடனடியாக நடை பெறுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்று மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு கூறினார்.

இந்திய விமான ஆணையம் (ஏஏஐ) மற்றும் ஹெலிகாப்டர் தயாரிப்பு நிறுவனமான பவன் ஹன்ஸ் ஆகியன பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன. இதன் மூலம் இவற்றின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை நிலவுவதோடு அவற்றின் செயல்திறனும் மேம்படும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

ஏஏஐ மற்றும் பவன்ஹன்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்கான வரைவு பரிந்துரைகளை வெளி யிட்ட ராஜு மேலும் கூறியது: ஏர் இந்தியா நிறுவனத்தை மேம்படுத்துவதற்கான நிபுணர் குழு அமைக்கப்படும். இக்குழு இந்நிறுவனத்தை மேம்படுத்து வதற்கான வழிவகைகளை பரிந்துரைக்கும் என்றார். அரசுத் துறை நிறுவனமான ஏர் இந்தியா தனது முழு செயல்திறனுடன் செயல்பட வேண்டியது மிகவும் அவசியம். இந்த இலக்கை எட்டுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு அமைச்சகத்தின் கீழான இந்நிறுவனம் தனியார் நிறுவனங்களுடன் திறம்பட செயல்பட நடவடிக்கைகள் எடுக் கப்படும் என்றார்.

இந்திய விமான போக்கு வரத்து ஆணையம் (ஏஏஐ) தனி நிறுவனமாக ஏற்படுத்தப்பட்டு அது பங்குச் சந்தையில் பட்டிய லிடப்படும். இதன் மூலம் அதன் செயல் திறன் மேம்படுவதோடு அதில் வெளிப்படையான செயல் பாடுகளும் இருக்கும். இதே நோக்கத்தோடு ஹெலிகாப்டர் தயாரிக்கும் பவன் ஹன்ஸ் நிறுவனமும் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவதாக அவர் கூறினார்.

அரசுத் துறை நிறுவனங்களில் மினிரத்னாவாகத் திகழும் ஏஏஐ, நாடு முழுவதும் உள்ள 125 விமான நிலையங்களை நிர்வகிக்கிறது. இவற்றில் 11 சர்வதேச விமான நிலையங்கள், 81 உள்நாட்டு போக்குவரத்து விமான நிலையங்களாகும். இது தவிர சுங்கத்துறையின் கீழான 8 விமான நிலையங்களையும் நிர்வகிக்கிறது. இத்துடன் பாது காப்புத்துறையின் கீழான 25 விமான நிலையங்களையும் நிர்வகிக்கிறது.

மும்பை, டெல்லி, ஹைதரா பாத், பெங்களூரு, நாகபுரி விமான நிலையங்களை மேம்படுத்து வற்காக கூட்டு சேர்ந்துள்ளது. இந்திய வான் பரப்பில் அனைத்து விமான போக்கு வரத்தையும் ஏஏஐ நிர்வகிக்கிறது. அத்துடன் கடல் பரப்புகளிலும் தேவையான கருவிகளை நிறுவி விமான பயணத்தை பாது காப்பானதாக நிர்வகிக்கிறது.

பவன் ஹன்ஸ் நிறுவனம்

1985-ம் ஆண்டு அரசு நிறுவனமாக மாற்றப்பட்டது. இந்நிறுவனத்தில் 51 சதவீத பங்குகள் அரசு வசம் உள்ளது. எஞ்சியுள்ள 49 சதவீத பங்குகள் மற்றொரு பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி வசம் உள்ளது. தொடக்கத்தில் இந்நிறுவனம் எண்ணெய், எரிவாயு நிறுவனங் களுக்குத் தேவையான ஹெலி காப்டர் சேவையை அளிக்கும் நிறுவனமாக செயல்பட்டது. கடல்பரப்பு மற்றும் மலை பிரதே சங்களில் எண்ணெய் அகழ்வுக்கு ஹெலிகாப்டர் சேவையை இந்நிறுவனம் அளித்தது.

பின்னர் மலைப் பிரதேசங்களில் சுற்றுலா மேம்பாட்டு சேவையை அளித்தது. கடந்த சில ஆண்டுகளில் ஆசியாவிலேயே மிகப் பெரிய ஹெலிகாப்டர் நிறுவனமாக இது உருவெடுத்துள்ளது. இந்நிறுவனம் வசம் 47 ஹெலிகாப்டர்கள் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x