Last Updated : 20 Nov, 2014 09:44 AM

 

Published : 20 Nov 2014 09:44 AM
Last Updated : 20 Nov 2014 09:44 AM

இன்போசிஸில் அந்நிய முதலீட்டு அளவு அதிகரிப்பு

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எப்ஐஐ) அதிக அளவில் முதலீடு செய்ய தேர்வு செய்யும் நிறுவனமாக இன்போசிஸ் திகழ்கிறது. கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் அந்நிய முதலீடு 42.67 சதவீத அளவுக்கு அதிகரித்திருப்பது இப்போது முதல் முறையாகும்.

ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலத்தில் ஒட்டுமொத்தமாக எப்ஐஐ வசம் உள்ள பங்கு 42.67 சதவீதமாகும். கடந்த ஆண்டு இதே காலத்தில் இவர்களது முதலீடு 39.93 சதவீதமாக இருந்தது. இதற்கு முன்பு எப்ஐஐ முதலீடு 2005-ம் ஆண்டு 42.87 சதவீத அளவுக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது. நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்தில் எப்ஐஐ வசம் 41.58 சதவீத அளவுக்கு பங்குகளை வைத்திருந்தனர்.

ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலத்தில் இன்போசிஸ் பங்குகளின் விலை 14 சதவீதம் உயர்ந்தது. இதே காலகட்டத்தில் சென்செக்ஸ் 4.78 சதவீதம் மட்டுமே உயர்ந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x