Last Updated : 19 Aug, 2016 10:30 AM

 

Published : 19 Aug 2016 10:30 AM
Last Updated : 19 Aug 2016 10:30 AM

நான்கு வங்கிகளை இணைக்க எஸ்பிஐ ஒப்புதல்

இந்தியாவில் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) உடன் அதன் 3 துணை வங்கிகள் மற்றும் பாரதிய மகிளா வங்கியை இணைக்க எஸ்பிஐ இயக்குநர் குழு நேற்று ஒப்புதல் அளித்தது. எஸ்பிஐ ஒப்பு தல் அளித்துள்ளதைத் தொடர்ந்து இதற்கான நடவடிக்கைகள் உடனடியாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர் அண்ட் ஜெய்ப்பூர் மற்றும் மகளிர்க்கென தொடங்கப்பட்ட மகிளா வங்கி ஆகியவற்றை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டி யாலா மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதராபாத் ஆகிய துணை வங்கி கள் தற்போதைய திட்டத்தில் இல்லை. இந்த இரண்டு வங்கி களும் பட்டியலிடப்படவில்லை.

கடந்த ஜூன் மாதத்தில் எஸ்பிஐ-யுடன் அதன் துணை வங்கிகளை ஒன்றிணைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. வங்கி கள் தேசியமயமாக்கப்பட்ட பிறகு பெரிய வங்கியுடன் துணை வங்கிகள் ஒன்றிணைக்கும் மிகப் பெரிய நடவடிக்கையாக இது அமையும். வங்கிக் துறையில் மிகப் பெரிய இணைப்பாக இது கருதப்படுகிறது.

இந்த இணைப்புக்குப் பிறகு எஸ்பிஐ நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ. 37 லட்சம் கோடியாக உயரும். ஸ்டேட் பாங்க் ஆப் பிகா னீர் மற்றும் ஜெய்ப்பூர் வங்கியின் 10 பங்குகளுக்கு (ரூ.10 முகமதிப்பு) எஸ்பிஐ 28 பங்குகளை (ரூ.1 முகமதிப்பு) அளிக்கும்.

இதேபோல ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் ஆகிய வங்கிகளின் 10 பங்குகளுக்கு எஸ்பிஐயின் 22 பங்குகள் கிடைக்கும். இணைப்புக் குப் பிறகு இந்தியாவின் இரண் டாவது பெரிய வங்கியான ஐசிஐசிஐ வங்கி நிர்வகிக்கும் சொத்து மதிப் பைக் காட்டிலும் ஐந்து மடங்கு சொத்தை எஸ்பிஐ நிர்வகிப்பதாக இருக்கும். இந்தியாவில் வங்கித் துறை நிர்வகிக்கும் சொத்து மதிப் பில் நான்கில் ஒரு பகுதி எஸ்பிஐ வசமாகும். அதேபோல மூலதனம் ரூ. 4 லட்சம் கோடியாக இருக்கும்.

வங்கி இணைப்பு தொடர்பாக 8 நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டு, எந்த வங்கி பங்குக்கு எவ்வளவு அளிப்பது என்பது ஆராயப்பட்ட தாக வங்கியின் தலைமை நிதி அதி காரி அன்ஷுலா காந்த் தெரிவித் துள்ளார். வங்கிகளின் நிதி நிலையை ஆராய கடந்த மே 16-ம் தேதி வரம்பாக நிர்ணயிக்கப்பட்டு அன்றைய தேதி வரை வங்கிகளின் நிதி நிலையை இக்குழு ஆராய்ந்தது.

இந்த வங்கி இணைப்பு சில வங்கிகளுக்கு சாதகமாக அமையலாம். மேலும் துணை வங்கிகளில் எஸ்பிஐ பெருமளவு பங்கு வைத்துள்ளது. இதனால் நிதி பாதிப்பு பெருமளவு இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இணைப்புக்குப் பிறகு உலகில் பெருமளவு சொத்தை நிர் வகிக்கும் 50 முன்னணி வங்கிகளில் ஒன்றாக எஸ்பிஐ உயரும் என்று காந்த் நம்பிக்கை தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x