Published : 13 Aug 2016 10:49 AM
Last Updated : 13 Aug 2016 10:49 AM

இவரை தெரியுமா?- அஜய் சீனிவாசன்

ஆதித்யா பிர்லா பைனான்ஸியல் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2007-ம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

2001-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு ஜுன் மாதம் வரை புரூடென்ஷியல் கார்ப்பரேஷன் ஆசியா நிறுவனத்தின் பண்ட் மேனேஜ்மெண்ட் பிரிவின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.

1998-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை புரூடென்ஷியல் ஐசிஐசிஐ அசெட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

1995-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை ஐடிசி திரட்நீடில் ஏஎம்சி நிறுவனத்தின் இணை தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.

1991-ம் ஆண்டு முதல் 1995-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை ஐடிசி நிறுவனத்தின் முதலீட்டு பிரிவின் பொது மேலாளராக பணியாற்றியவர்.

டெல்லியில் உள்ள செயிண்ட் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதார பிரிவில் இளங்கலை பட்டமும், அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் நிதியியல் மற்றும் தொழில் கொள்கை பிரிவில் எம்பிஏ பட்டமும் பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x