Published : 19 Mar 2017 11:56 AM
Last Updated : 19 Mar 2017 11:56 AM

13 மாருதி பணியாளர்களுக்கு ஆயுள் தண்டனை

மாருதி நிறுவன கலவர வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 13 பணி யாளர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நான்கு பணி யாளர்களுக்கு ஐந்து ஆண்டு சிறைதண்டனையும் அளித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மாருதி நிறுவனத்தின் மானேசர் ஆலையில் 2012-ம் ஆண்டு ஆண்டு நடைபெற்ற கலவரத்தில், அந்த ஆலையில் மனித வள துறை மேலாளர் அவினேஷ் குமார் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் 148 பணியாளர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. ஹரியாணா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் மார்ச் 10-ம் தேதி அன்று 117 பணியாளர்களை விடு வித்த நீதிமன்றம், 31 நபர்கள் இந்த கொலையில் சம்பந்தப்பட் டுள்ளதாக அறிவித்தது. இந்த நிலையில் நேற்று இவர்களுக்கான தீர்ப்பை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆதாரங்களின் அடிப்படையில் 13 பணியாளர்கள், திட்டமிட்ட கொலை முயற்சியில் சம்பந்தப் பட்டுள்ளனர் என்று குறிப்பிட்ட நீதிமன்றம், இவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. குற்ற வாளிகள் என அறிவிக்கப்பட்ட 31 பேரில் 12 பேர் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த முன்னாள் ஊழியர்கள் ஆவர். சிறைத் தண்டனை பெற்றுள்ளவர்களில் இவர்களும் உள்ளனர்.

நான்கு நபர்களுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை அளிக் கப்பட்டுள்ளது. இதர 14 பணியாளர் கள் தண்டனை காலத்தை ஏற் கெனவே சிறையில் அனுபவித் துள்ளதால் விடுவிக்கப்பட்டுள்ள னர். ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகையை செலுத்திவிட் டால் சிறை தண்டனையில் இருந்து வெளியேறலாம் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x