Published : 21 Jul 2016 11:40 AM
Last Updated : 21 Jul 2016 11:40 AM

இவரைத் தெரியுமா ? - கௌதம் சாட்டர்

பேட்டரி தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக விளங்கும் எக்ஸைடு இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2016-ம் ஆண்டு மே மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

2013-ம் ஆண்டு மே மாதத்திலிருந்து 2016-ம் ஆண்டு மே மாதம் வரை எக்ஸைடு நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

இதே நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் பிரிவின் தலைவர் பொறுப்பிலும் இருந்தவர்.

குளோரைடு பவர் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்தவர்.

குளோரைடு மெட்டல்ஸ் நிறுவனத்தின் பொறுப்புகள் இல்லாத நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் எம்பிஏ பட்டம் பெற்றவர்.

எஸ்பேக்ஸ் பேட்டரீஸ் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்தவர். மேலும் இதே நிறுவனத்தின் தெற்கு ஆசியப் பிரிவின் தலைவராகவும் இருந்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x