Published : 24 Dec 2013 10:40 AM
Last Updated : 24 Dec 2013 10:40 AM

3வது நாளாக ஏறுமுகத்தில் இந்திய ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து 3-வது நாளாக ஏறுமுகத்தில் உள்ளது.

நேற்று, கடந்த ஒரு வாரத்தில் இல்லாத அளவாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து 61.95 என்ற புதிய உச்சத்தை தொட்டது.

இந்நிலையில் இன்று காலை அந்நிய செலாவனி சந்தையில் வர்த்தகம் தொடங்கிய போது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து 61.83 என்ற நிலையில் இருந்தது.

இதற்கிடையில், பங்குச்சந்தையில், வர்த்தக தொடக்கத்தின் போது சென்செக்ஸ் 55.89 புள்ளிகள் உயர்ந்து 21,156.92 புள்ளிகளிலும், நிப்டி 16.45 புள்ளிகள் உயர்ந்து 6,300.95 புள்ளிகளிலும் இருந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x