Published : 24 Jun 2016 09:42 AM
Last Updated : 24 Jun 2016 09:42 AM

எல்ஐசி தலைவர் எஸ்கே ராய் ராஜினாமா

பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் தலைவர் எஸ்கே ராய் திடீரென ராஜினாமா செய்தி ருக்கிறார். இன்னும் இரு வருடங் கள் பதவி காலம் இருக்கும் போதே ராஜினாமா செய்திருக்கிறார். ராய் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை நிதி அமைச்சகத்துக்கு அனுப்பி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரது ராஜினாமா ஏற்கப்பட்டுவிட்டது.

ஏன் ராஜினாமா செய்திருக் கிறார் என்ற காரணம் அறிவிக்கப் படவில்லை. அதே சமயம் எஸ்கே ராய் மற்றும் எல்ஐசி செய்தி தொடர்பாளர் என யாரும் இது குறித்த கருத்தினை தெரிவிக்க வில்லை. ஆனால் தனிப்பட்ட கார ணங்களுக்காக கடந்த சில மாத காலமாகவே ராஜினாமா செய்வது குறித்து எஸ்கே ராய் பரிசீலித்து வந்ததாகவும், மத்திய அரசில் இருந்து எந்த நெருக்கடியும் இல்லை எனவும், எல்ஐசி செய்தி ருக்கும் முதலீடுகளில் மத்திய அர சின் தலையீடு இல்லை எனவும் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் பெரிய நிறுவனம் எல்ஐசி ஆகும். 18 லட்ச ரூபாய் மதிப்புள்ள பங்குச் சந்தை முதலீடுகளை இந்த நிறுவனம் வைத்துள்ளது.

1981-ம் ஆண்டு எல்ஐசியில் ராய் சேர்ந்தார். 30 வருடங்களுக்கு மேலாக இன்ஷூரன்ஸ் துறையில் அனுபவம் மிக்கவர். கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றார். ஒரு மாதத்துக்கு பிறகு எல்ஐசியின் தலைவராக நியமிக்கப்பட்டார். நிர்வாக இயக்குநராக பொறுப் பேற்பதற்கு முன்பு சர்வதேச செயல் பாடுகளை கவனித்து வந்தார்.

மிக சமீபத்தில் எல்ஐசி தலைவர் தன்னுடைய பதவி காலத்துக்கு முன்பாக ராஜினாமா செய்தது கிடையாது. கடந்த சில நாட்க ளுக்கு முன்பு ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் செப் டம்பர் 4-ம் தேதிக்கு பிறகு கவர்ன ராக தொடர விருப்பமில்லை என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

புதிய தலைவரை தேர்ந்தெடுக் கும் பணி விரைவில் தொடங்கும் என்றும், இன்னும் ஒரு மாத காலத் துக்குள் புதிய தலைவர் நிய மனம் செய்யப்படுவார் என்றும் நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித் திருக்கின்றனர். நிறுவனத்துக்குள் இருக்கும் நபர் ஒருவரே அடுத்த தலைவராக வாய்ப்பு இருப்ப தாகவும் நிதி அமைச்சக அதிகாரி கள் தெரிவித்திருக்கிறார்கள்.

தற்போது வி.கே. ஷர்மா மற்றும் உஷா சங்வான் ஆகிய இரு நிர்வாக இயக்குநர்கள் இருக்கின்றனர். இன்னும் ஒரு நிர்வாக இயக்குநர் பதவி காலியாக இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x