Published : 24 Oct 2014 10:26 AM
Last Updated : 24 Oct 2014 10:26 AM

கவில் ராமசந்திரன் - இவரைத் தெரியுமா?

$ ஹைதராபாத்தில் இருக்கும் இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிஸினஸில் பேராசிரியர். குடும்ப பிஸினஸ், தொழில்முனைவு ஆகிய பிரிவுகளில் நிபுணர்.

$ கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிகவியல் பட்டமும், இங்கிலாந்து கிரான்பீல்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர்.

$ இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிஸினஸுக்கு வருவதற்கு முன்பு ஐஐஎம் அகமதாபாத்தில் 15 வருடங்கள் பேராசிரியராக இருந்தார்.

$ உலக வங்கி, சர்வதேச தொழிலாளர் அமைப்பு, மாநில அரசு உள்ளிட்ட பல அமைப்புகளில் ஆலோசகராக இருக்கிறார். செபி மற்றும் யூபிஎஸ்சி உள்ளிட்ட அமைப்புகளின் இயக்குநர் குழுவிலும் இருந்தவர். இது தவிர பல அமைப்புகளுக்கு ஆலோசகராகவும் இவர் இருக்கிறார்.

$ தொழில்முனைவு சம்பந்தமாக புத்தகங்களை எழுதி இருக்கிறார். மேலும் பிஸினஸ் செய்தித்தாள்களில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார்.

$ ஐடிசி, ஐசிஐசிஐ வங்கி, புளுஸ்டார் உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுக்கு பயிற்சிகளும் கொடுத்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x