Last Updated : 12 Feb, 2017 11:01 AM

 

Published : 12 Feb 2017 11:01 AM
Last Updated : 12 Feb 2017 11:01 AM

மருத்துவ கருவி தயாரிப்பு: வரி முரண்பாடுகள் நீக்கம் - அமைச்சர் ஆனந்த் குமார் அறிவிப்பு

மருத்துவத் தொழிலுக்குத் தேவை யான கருவிகள் தயாரிப்பில் நிலவி வந்த வரி சார்ந்த வேறு பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் ஆனந்த் குமார் தெரிவித்துள்ளார். பெங்களூரில் தொடங்கிய இந்தியா பார்மா 2017 மாநாட்டில் அவர் மேலும் பேசியதாவது:

பெங்களூருவில் மருந்து தயாரிப்பு மற்றும் மருத்துவ கருவிகள் உற்பத்தி சார்ந்த மண் டலம் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். மருத்துவத்துக் கென தனி அமைச்சகம் உருவாக்குவது குறித்து பிரதமர் அலுவலகம் தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார்.

மருந்துகளின் விலை குறித்த வெளிப்படைத்தன்மை உருவாக்கப்படும் என்று உறுதி அளித்த அவர், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தரமான மருந்துகளை உரிய விலையில் தயாரிக்க முன்வர வேண்டும் என்றார். கட்டுபடியாகும் விலையில் மருந்து தயாரிக்கப்பட்டால்தான் அதன் பலன் சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் சென்றடையும் என்று குறிப்பிட்டார்.

மருந்து தயாரிப்புக்குத் தேவையான மூலப் பொருளுக்கு அதிக அளவிலான வரி விதிப்பு இருந்தது என்றும், இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு வரி குறைவாக இருந்ததால் இத்துறையில் இந்திய நிறுவனத் தயாரிப்புகள் போட்டியிட முடியாத சூழல் நிலவிவந்தது. அந்த முரண்பாடுகள் நீக்கப்பட்டு விட்டதாக அவர் கூறினார்.

இந்திய மருந்துத் துறை மிகப் பெரிய மாற்றத்துக்குத் தயாராகி வருகிறது. உலக அளவில் இத்துறை மிகச் சிறந்ததாக உருவாகும் என்றார். நமது மருந்துத்துறையின் சந்தை மதிப்பு 3,200 கோடி டாலராகும். அடுத்த மூன்று ஆண்டுகளில் இது 5,500 கோடி டாலராக உயரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

15 நாடுகளைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இந்த மாநாட்டில் அரங்குகளை அமைத்திருந்தன. சர்வதேச அளவில் 6 நாடுகளைச் சேர்ந்த மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகளும் இதில் பங்கேற் றுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x