Published : 03 Jan 2016 12:19 PM
Last Updated : 03 Jan 2016 12:19 PM

நாள்தோறும் 200 கிராமங்களுக்கு மின் இணைப்பு: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்

நாள் ஒன்றுக்கு 200 கிராமங்களுக்கு மின் இணைப்பை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’’என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

சென்னையை அடுத்த மஹிந்திரா வேர்ல்டு சிட்டியில் ரூ.1.65கோடி செலவில் இயற்கை எரிவாயு உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மஹிந்திரா ரிசர்ச் வேலி, மஹிந்திரா வேர்ல்டு சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனத் தின் கூட்டு முயற்சியால் நிறுவப் பட்டுள்ள இந்த உற்பத்தி மையத் தின் மூலம் 10 டன் எடையுள்ள உணவு மற்றும் சமையலறைக் கழிவுகளில் இருந்து தினமும் இயற்கை எரிசக்தி உற்பத்தி செய்யப்பட உள்ளது. அத்துடன், தினமும் 4டன் எடையுள்ள இயற்கை உரமும் தயாரிக்கப்பட உள்ளது. இந்த எரிவாயு உற்பத்தி மையத்தை மத்திய நிலக்கரி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் மின்துறை இணையமைச்சர் பியூஷ் கோயல் நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர்,அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த எரி வாயு உற்பத்தி மையத்தின் மூலம் தயாரிக்கப்படும் இயற்கை எரிவாயுவானது வாகனங்களுக் கான எரிபொருளாக விளங்கும் சிஎன்ஜி-க்கு மாற்றாகவும், சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எல்பிஜி-க்கு மாற்றாகவும் பயன்படுத்தப்படும். இதன் மூலம், மஹிந்திரா வேர்ல்டு சிட்டி இந்தியா வின் உணவு கழிவுகள் இல்லாத பகுதி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

பிரதமர் மோடி கடந்த ஆண்டு ஆற்றிய சுதந்திர தின உரையில் இந்தியாவில் 18 ஆயிரம் கிராமங்களுக்கு இன்னும் மின்வசதி கிடைக்கவில்லை எனக் கூறினார். இந்த கிராமங்களுக்கு ஆயிரம் நாட்களில் மின்சாரம் கிடைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால்,நாங்கள் 730 நாட்களுக் குள் இந்த இலக்கை அடையத் தீர்மானித்துள்ளோம். இதற்காக, நாள் ஒன்றுக்கு 200கிராமங் களுக்கு மின் இணைப்பை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.அடுத்த இரண்டரை ஆண்டுகளில் ஆறாயிரம் கிராமங்களில் இயற்கை எரிவாயு ஆலை அமைக்கப்படும்.

கடந்த டிசம்பர்29-ம் தேதி மின்தடை இல்லாத நாளாக இருந் தது. இது இந்திய வரலாற்றில் ஒரு மகத்தான சாதனையாகும். மகாராஷ்டிராவில் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காத வாகனங் களுக்கு வரி விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதே போல்,பாஜக ஆளும் பிற மாநில அரசுகளிடமும் வலியுறுத்தப்படும்.

இவ்வாறு அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.

இவ்விழாவில்,மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பவன் கோயங்கா உள்ளிட்ட ஏராள மானோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x