Published : 11 Sep 2016 11:22 AM
Last Updated : 11 Sep 2016 11:22 AM

உலக பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு இந்திய வங்கிகள் சிறப்பாக செயல்படுகின்றன: கேவிபி நூற்றாண்டு விழாவில் பிரணாப் முகர்ஜி பாராட்டு

உலக அளவில் ஏற்பட்ட பொரு ளாதார நெருக்கடிகளை எதிர் கொண்டு இந்திய வங்கிகள் சிறப் பாக செயல்படுவதாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பாராட்டு தெரிவித்தார்.

கரூர் வைஸ்யா வங்கியின் (கேவிபி) நூற்றாண்டு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று நடைபெற்றது. கேவிபி வளர்ச்சி வரலாறு நூலை தமிழக ஆளுநர் (பொறுப்பு) சி. வித்யாசாகர் ராவ் வெளியிட, முதல் பிரதியை குடி யரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பெற்றுக் கொண்டார்.

விழாவில் பிரணாப் முகர்ஜி பேசியதாவது: தனிப்பட்ட மனிதராக இருந்தாலும், நிறுவனமாக இருந் தாலும் 100ஆண்டுகளை கடப்பது மிகப்பெரிய சாதனையாகும். அந்த வகையில் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் கரூர் வைஸ்யா வங் கிக்கு எனது பாராட்டுகளைத் தெரி வித்துக் கொள்கிறேன். 100 ஆண்டு களுக்கு முன்பு இந்த வங்கியை தொடங்கிய வெங்கடராம செட்டி யார், ஆதி கிருஷ்ண செட்டியார் ஆகியோரின் தொலைநோக்குப் பார்வையை நினைவுகூர விரும்புகிறேன்.

கடந்த 100 ஆண்டுகளில் இந்திய வங்கித் துறை பல்வேறு மாற்றங்களைச் சந்தித்துள்ளது. 1969-ல் வங்கிகளை அன்றைய பிரத மர் இந்திரா காந்தி தேசியமய மாக்கினார். 1975-ல் வங்கிகள் மற் றும் வருவாய்த் துறை அமைச்ச ராகும் வாய்ப்பு எனக்குக் கிடைத் தது. 1969-ல் இந்தியா முழுவதும் 6,800 வங்கிக் கிளைகள் இருந்தன. தற்போது 1 லட்சத்து 17 ஆயிரம் வங்கிக் கிளைகள் உள்ளது. மொத் தம் 146 வங்கிகளும், 57 கிராமிய வங்கிகளும் உள்ளன. நாட்டின் முன்னேற்றத்தில் இந்த வங்கிகள் முக்கியபங்காற்றி வருகின்றன.

2008-ல் உலக அளவில் மிகப் பெரிய பொருளாதார நெருக் கடி ஏற்பட்டது. இதனால் பல நாடு களில் வங்கித் துறை பாதிக்கப் பட்டன. ஆனால், இந்த நெருக்க டியையும் மீறி இந்திய வங்கிகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின் றன. இதற்கு சிறப்பான வங்கி மேலாண்மையே காரணம்.

ஆனாலும் வாராக் கடன்களால் இந்திய வங்கிகள் மிகப்பெரிய பிரச்சினையை சந்தித்து வருகின் றன. வாராக் கடன்களை சமாளிக்க இந்திய அரசு செலவிடும் தொகை யும் அதிகரித்து வருகிறது. வங்கி கள் கடன் கொடுப்பது அவசிய மானது. அதேநேரத்தில் ஆராய்ந்து கடன்கொடுக்க வேண்டும். ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியிலிருந்து சமீபத்தில் சென்ற ரகுராம் ராஜன் வாராக் கடன்களை வசூலிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

சரக்கு சேவை வரியை (ஜிஎஸ்டி) கொண்டுவர கடந்த 15 ஆண்டு களாக முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றது. தற்போது இந்த மசோதாவுக்கு நாடாளுமன்றமும், 20 மாநிலங்களின் சட்டப் பேரவை யும் ஒப்புதல் அளித்துள்ளன. ஜிஎஸ்டி கவுன்சில் அமைக்கப்பட்டு ஒரு முனை வரி விரைவில் அமலுக்கு வரும். இதன் மூலம் வங்கித் துறையும், நாட்டின் பொருளாதாரமும் மேம்படும்.

நாட்டின் பணவீக்கம் 1.3 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாக குறைந்துள்ளது நல்ல முன்னேற் றமாகும். 2016-17-ல் நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதமாக இருக்கும். இவ்வாறு பிரணாப் முகர்ஜி பேசினார்.

தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ்: நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் கேவி பியின் வாடிக்கையாளர்என்பதில் நானும் பெருமிதம் கொள்கிறேன். கடந்த மக்களவைத் தேர்தலின் போது கேவிபி மூலமே எனது தேர்தல் செலவுகளை மேற்கொண் டேன். வங்கிகள் இந்தியப் பொரு ளாதாரத்தின் முக்கியமான தூணா கும். வங்கிகளின் துணையின்றி பொருளாதார வளர்ச்சி சாத்திய மற்றது. கல்விக் கடன்கள் மூலம் அடித்தட்டு மாணவர்கள் உயர் கல்வி பெற வங்கிகள் துணை புரிந்து வருகின்றன. பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் தொழில் துறையில் மேம்பாடு அடைய வங்கிகள் அதிக அளவில் கடனு தவி செய்ய வேண்டும். பெரு நிறுவ னங்கள் தங்களது வருவாயில் 2 சத வீதத்தை சமுதாய நலனுக்காக வும், அடித்தட்டு மக்களின் மேம்பாட் டுக்காகவும் செலவழிக்க வேண் டும். இவ்வாறு அவர் பேசினார்.

தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன், கேவிபி தலைவர் பி.சுவாமிநாதன், நிர்வாக இயக்குநர் கே.வெங்கட் ராமன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x