Published : 16 Jul 2016 10:08 AM
Last Updated : 16 Jul 2016 10:08 AM

சிஇஓ-க்கு சொகுசு கார் பரிசளித்த ஊழியர்கள்

அமெரிக்காவின் சியாட்டில் நகரைச் சேர்ந்த கிராவிட்டி பேமெண்ட் நிறுவனத்தின் ஊழியர் கள் அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியின் கனவு காரான அதிக விலை மதிப்புள்ள டெஸ்லா நிறுவன காரை பரிசளித்துள்ளனர்.

இதை கிராவிட்டி பேமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டான் பிரைஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எனது கனவு காரை கிராவிட்டி நிறுவன ஊழியர்கள் பரிசளித்து விட்டனர். இதன் மூலம் அவர்கள் எனது பணத்தை சேமித்து விட்டனர் என்று கூறியுள்ளார்.

இந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ரியான் பிர்கில் கூறுகையில், கடந்த வருடம் டெஸ்லா எஸ் மாடல் காரை தலைமைச் செயல் அதிகாரிக்கு பரிசளிக்க ஊழியர்கள் அனை வரும் விரும்பினோம். இந்த காரின் விலை 70,000 டாலருக்கு மேல் (இந்திய மதிப்பில் 46,94,581 ரூபாய்). எங்கள் நிறுவனத்தில் மொத்தம் 130 ஊழியர்கள் வேலை செய்கின்றனர். அவர்களிட மிருந்தே இந்தப் பணத்தை வசூ லித்து இந்த காரை பரிசளித் துள்ளோம்’’ என்று கூறினார்.

நிறுவனத்தில் வேலைப் பார்க்கும் 130 ஊழியர்களுக்கும் வருடத்திற்கு குறைந்தபட்சம் 70,000 டாலர் சம்பளத்தை உயர்த்தினார். மேலும் சில ஊழியர்களுக்கு ஆண்டு ஊதி யத்தை இரு மடங்காக உயர்த்தியுள்ளார். தன்னுடைய சலுகைகள் 11 லட்சம் டாலரி லிருந்து 70,000 டாலராக குறைத்துக்கொண்டு ஊழியர் களுக்கு சம்பளத்தை உயர்த்தி யுள்ளார். இதனால் ஊழியர்கள் இந்தக் காரை டான் பிரைசுக்கு பரிசளித்துள்ளனர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x