Published : 25 Jan 2017 11:08 AM
Last Updated : 25 Jan 2017 11:08 AM

விப்ரோ துணைத் தலைவர் குரியன் ஜனவரி 31-ல் ஓய்வு

நாட்டின் மூன்றாவது பெரிய ஐடி நிறுவனமான விப்ரோ நிறுவனத்தின் துணைத் தலைவர் டி.கே.குரியன் இம்மாதம் 31-ம் தேதி ஓய்வு பெறுகிறார். நிர்ணயம் செய்த காலத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னதாக ஓய்வு பெறுகிறார். புதிய தலைமைச் செயலாளர் மற்றும் செயல் இயக்குநராக அபித்அலி இஸட் நீமுச்வாலா நியமனம் செய்யப்பட்டபோது குரியன் துணைத் தலைவராக கடந்த வருடம் பதவி உயர்த்தப்பட்டார்.

இவர்கள் இருவரும் கடந்த 12 மாதங்களாக இணைந்து செயல்பட்டனர். புதிய பிரிவு களை உருவாக்கி நிறுவனத்தை பலப்படுத்தினார்கள். விப்ரோ நிறுவனத்தை விரிவுப்படுத்தி யதில் குரியனின் பங்கு மிக முக்கியமானது என விப்ரோ தலைவர் அஸிம் பிரேம்ஜி தெரிவித்தார்.

கடந்த 2000-ம் ஆண்டு விப்ரோ நிறுவனத்தில் குரியன் இணைந்தார். விப்ரோ நிறுவனத் தின் பல முக்கியமான பணிகளை கவனித்துவந்தார்.

விப்ரோ நிறுவனத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் ஆகும். பல மடங்கு வளர்ச்சி அடைந்திருக்கிறோம். உலகின் முக்கியமான நிறுவனங் களுடன் பணியாற்றி இருக்கி றோம். விப்ரோ நிறுவனத்தின் பணியாளர்கள் மற்றும் பங்கு தாரர்களுக்கு நன்றி என குரியன் தெரிவித்துள்ளார்.

அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பது குறித்த தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால் ஏற்கெனவே சில ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் குரியன் முதலீடு செய்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x