Last Updated : 13 Nov, 2013 02:58 PM

 

Published : 13 Nov 2013 02:58 PM
Last Updated : 13 Nov 2013 02:58 PM

பாண்ட் 2 (Yield) என்றால் என்ன?

பாண்ட் 2 (Yield)

ஒரு நிதி பத்திரம் தரும் வரவுக்கு Yield என்று பெயர். பொதுவாக Yield சதவிகிதத்தில் குறிப்பிடுவர். ஒரு Bond-ன் முக மதிப்பு (Face Value) ரூ.1,000 என்றும், அதன் முதிர்வுக் காலம் 10 வருடம் என்றும், வட்டி வருடத்திற்கு 10% (இதற்கு coupon பெயர்) என்றும் குறிப்பிடப்பட்டிருந்தால், வருடம்தோறும் ரூ.100 வட்டியாகக் கொடுக்கப்படும். இப்போது சந்தையில் வட்டிவிகிதம் 10% விட அதிகமாக உள்ளதாக வைத்துக்கொள்வோம். சந்தை வட்டி விகிதம் couponனை விட அதிகமாக இருந்தால், Bond-ன் சந்தை மதிப்பு குறைவாக இருக்கும் என்பது நமக்குத் தெரியும், எனவே, ரூ.1,000 முக மதிப்பு உள்ள Bond-ன் சந்தை விலை இப்போது ரூ666 என இருக்கிறது. இப்போது ரூ. 666 முதலீட்டிற்கு ரூ. 100 வட்டியாகப் பெறும்போது yield 15% ஆக உயர்ந்துள்ளது [(100/666)X 100=15%] என்பதைக் காண்க.

Yield Curve

வெவ்வேறு கால அளவுகளில் Bond-கள் விற்பனைக்கு இருக்கும். உதாரணமாக, ஒரு வருடத்தில் தொடங்கி 30 வருடங்கள் வரை கால அளவுகளில் Bond-கள் சந்தையில் கிடைக்கும். இவ்வாறு வெவ்வேறு கால அளவுகளில் உள்ள Bond-கள் எல்லாம் ஒரே அளவு ரிஸ்க், coupon, முக மதிப்பு கொண்டிருப்பதாக வைத்துக்கொள்வோம். இப்போது வெவ்வேறு Bond-களின் கால அளவுக்கேற்ப yield-களும் மாறும். உதாரணமாக கால அளவு அதிகமானால், அவ்வளவு நாட்களில் பெரும் மாற்றங்கள் நிகழும், எனவே, அதிக ரிஸ்க் உள்ளதாக முதலீட்டார்கள் நினைத்தால், நீண்ட கால Bond-க்கு அதிக yield எதிர்பார்ப்பார்கள். இங்கு உள்ள படத்தில், X-அச்சில் வெவ்வேறு Bond-ன் கால அளவுகளும், Y அச்சில் Yield அளவுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் y1 வலைக்கோடு இடமிருந்து வலமாக மேல் நோக்கி செல்கிறது, அதாவது, Bond-ன் கால அளவு அதிகமாகும் போது yield-ம் அதிகரிக்கிறது. இதற்கு மாறாக, y2 வலைக்கோடு இடமிருந்து வலமாக கீழ் நோக்கி செல்கிறது. இங்கு Bond-ன் கால அளவு அதிகமாகும் போது yield குறைகிறது. இது எதனால்? இப்போதுள்ள வட்டிவிகிதம் அதிகம் என்றும் எதிர்காலத்தில் வட்டி விகிதம் குறையும் என்ற எதிர்ப்பார்ப்பின் விளைவுதான் இந்த குறைந்து செல்லும் yield வலைக்கோடு.

|



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x