டிஜிட்டல் வாலட் மூலம் மியூச்சுவல் பண்டில் முதலீடு செபி அனுமதி

டிஜிட்டல் வாலட் மூலம் மியூச்சுவல் பண்டில் முதலீடு செபி அனுமதி
Updated on
1 min read

மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் ஒரு நிதி ஆண்டில் ரூ.50,000 வரை டிஜிட்டல் வாலட்கள் மூலம் முதலீடு செய்யலாம் என பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி ஒப்புதல் வழங்கி இருக்கிறது. ஆனால் மியூச்சுவல் பண்ட்களில் இருந்து பணத்தை எடுக்கும் பட்சத்தில் வங்கி கணக்கு மூலமாக மட்டுமே எடுக்க முடியும் எனவும் செபி தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக செபி மேலும் தெரிவித்திருப்பதாவது: வாலட்கள் மூலம் முதலீடு செய்ய அனுமதித்திருந்தாலும், கேஷ் பேக் உள்ளிட்ட எந்த சலுகைகளும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கொடுக்கக் கூடாது. அதேபோல ரொக்கம், நெட்பேங்கிங் அல்லது டெபிட் கார்ட் மூலமாக வாலட்களுக்கு செலுத்தப்படும் பணத்தை மட்டுமே மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்ய முடியும். கிரெடிட் கார்ட், சலுகைகள் மூலம் வாலட்களில் நிரப்பப்படும் தொகையை வைத்து மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்ய முடியாது என செபி தெரிவித்திருக்கிறது.

ஆப்ஷன் வர்த்தகம்

கமாடிட்டி சந்தையில் ஆப்ஷன் வர்த்தகத்துக்கு செபி ஒப்புதல் வழங்கி இருக்கிறது. நேற்று நடந்த செபியின் இயக்குநர் குழுவில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டது. கமாடிட்டி டெரிவேட்டிவ் சந்தையை விரிவு படுத்துவதற்காக எடுக்கப்பட்ட முக்கியமான அறிவிப்பு என செபி தலைவர் அஜய் தியாகி தெரி வித்தார். விரிவான விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in