Published : 24 Oct 2013 12:45 PM
Last Updated : 24 Oct 2013 12:45 PM

விஜய் கோவிந்தராஜன் - இவரைத் தெரியுமா?

#1969-ம் வருடம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.காம் படித்தவர். 72-ம் வருடம் நடந்த சி.ஏ. தேர்வில் இந்திய அளவில் முதல் இடம்பிடித்த மாணவர். பிறகு ஹார்வேர்டு பிஸினஸ் ஸ்கூலில் எம்.பி.ஏவும், முனைவர் பட்டமும் பெற்றார்.

#இப்போது டக் ஸ்கூல் ஆஃப் பிஸினஸில் சர்வதேச பிஸினஸ் துறையின் பேராசிரியராக இருக்கிறார். இதற்கு முன்பு ஹார்வேர்டு பிஸினஸ் ஸ்கூல் மற்றும் ஐ.ஐ.எம். ஆமதாபாதில் துணைப்பேராசிரியராக பணிபுரிந்தவர்.

#நிர்வாகத்துறையில் பல புத்தகங்களை எழுதி இருக்கிறார். குறிப்பாக ’இன்னோவேஷன்’ குறித்து இவர் எழுதிய புத்தகங்கள் எம்.பி.ஏ. படிக்கும் மாணவர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் மத்தியில் மிக பிரபலம்.

#முன்னணி பிஸினஸ் இதழ்களான ஹார்வேர்டு பிஸினஸ் ரிவ்யூ, பிஸினஸ் வீக் இதழ்களில் தொடர்ந்து கட்டுரை எழுதி வருகிறார்.

#உலகின் முக்கியமான சி.இ.ஓ.கள் பலரும் இவருடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள். குறிப்பாக ஜி.இ. நிறுவனத்தில் முதன்மை இன்னோவேஷன் கன்சல்டன்டாக இருந்திருக்கிறார்.

#சர்வதேச அளவில் இருக்கும் நிர்வாகவியல் சிந்தனையாளர்களில் முக்கியமானவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x