Published : 04 Jan 2017 10:33 AM
Last Updated : 04 Jan 2017 10:33 AM

பஞ்சாப் நேஷனல் வங்கியின் வணிகம் ரூ.10 லட்சம் கோடியை தாண்டியது: நிர்வாக இயக்குநர் உஷா அனந்த சுப்பிரமணியன் தகவல்

பஞ்சாப் நேஷனல் வங்கியின் வணிகம் ரூ.10 லட்சம் கோடியை தாண்டியுள்ளதாக அதன் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அலுவலருமான உஷா அனந்த சுப்பிரமணியன் தெரிவித்தார். திருச்சியில் நேற்று அவர் அளித்த பேட்டி:

நாடு முழுவதும் பெண் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை பஞ்சாப் நேஷனல் வங்கி மேற்கொண்டு வருகிறது.

டிசம்பர் 31-ம் தேதி நிலவரப்படி பஞ்சாப் நேஷனல் வங்கியின் வணிகம் ரூ.10 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. கடந்த 123 ஆண்டுகளில் தற்போது இந்த மைல் கல்லை எட்டியுள்ளோம். ஊழியர்களின் அர்ப்பணிப்பு உணர்வும், வாடிக்கையாளர்களுமே இதற்கு முக்கிய காரணம். இந்த தொகையை விரைவில் ரூ.11 லட்சம் கோடியாக உயர்த்துவோம்.

பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு நாடு முழுவதும் சுமார் 7 ஆயிரம் கிளைகள் உள்ளன. பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பிறகு, மக்களிடம் ஏற்பட்ட சிரமத்தைத் தவிர்க்க இக்கிளைகள் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

டிஜிட்டல் முறை விழிப்புணர்வு

தற்போது, டிஜிட்டல் மூலமாக பண பரிமாற்றம் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மார்ச் மாதம் வரை இதற்கு சேவைக் கட்டணம் கிடை யாது. தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி, திருவாரூர் மாவட்டம் ஏத்தக்குடி ஆகியவற்றை தத்தெடுத்து, முற்றிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் கிராமங்களாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வரு கிறோம். ரங்கம் உள்ளிட்ட 25 இடங்களில் அமைக்கப்பட்டு வரும் கிளைகள் விரைவில் திறக்கப்படும்.

விஜய் மல்லையாவிடமிருந்து

நாட்டில் பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பிறகு, பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.95 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் ரூ.10 ஆயிரம் கோடி வராக்கடனை வசூலித்துள்ளோம். விஜய் மல்லையாவிடம் இருந்து இதுவரை வசூலிக்கப்படவில்லை. பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பிறகு தற்போது நிலவி வரும் சூழல் முழுமையாக சீரடைய மார்ச் மாதம் வரை ஆகும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x